Published:Updated:

`கண் திறந்து பார்...!' நவாஸ் ஷெரீஃப் தனது மனைவியிடம் பேசிய கடைசி நிமிடம்

`கண் திறந்து பார்...!' நவாஸ் ஷெரீஃப் தனது மனைவியிடம் பேசிய கடைசி நிமிடம்
`கண் திறந்து பார்...!' நவாஸ் ஷெரீஃப் தனது மனைவியிடம் பேசிய கடைசி நிமிடம்

`கண் திறந்து பார்...!' நவாஸ் ஷெரீஃப் தனது மனைவியிடம் பேசிய கடைசி நிமிடம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மனைவி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில், ஷெரீஃப் தனது மனைவியிடம் பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் நவாஸ் ஷெரீஃப் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். இதையடுத்து அவர் ஜூலை 13 -ம் தேதி கைது செய்யப்பட்டார். லண்டனிலிருந்து பாகிஸ்தான் திரும்பியபோது விமான நிலையத்திலே அவரும் அவரின் மகளும் கைது செய்யப்பட்டனர். நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகளும், மகள் மரியம் நாவாஷூக்கு 7 ஆண்டுகளும் மற்றும் அவரது மருமகனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. 

இதற்கிடையில், ஷெரீஃபின் மனைவி குல்சூம் தொண்டைப் புற்றுநோயால் கடும் அவதிப்பட்டு வந்தார். அதனால், சிகிச்சைக்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றவழக்கில் நவாஸ் ஷெரீஃபின் தண்டனை உறுதியானது. இதன் காரணமாக லண்டனிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்ப முடிவுசெய்த ஷெரீஃப், சிகிச்சையில் சுயநினைவின்றி இருந்த தனது மனைவியிடம் கடைசியாகப் பேசியிருக்கிறார். மனைவியிடம் அவர் பேசிய அந்தக் கடைசி தருணங்கள் அவர் இறந்த பிறகு வீடியோவாக தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருக்கும் வீடியோவும் இதுவே.

சுயநினைவின்றி சிகிச்சையில் இருந்த குல்சூமிடம், `கடவுள் உனக்கு அனைத்து வலிமைகளையும் கொடுக்க வேண்டும். உனது கண்களைத் திறந்து பார் குல்சூம்' என்று தனது மனைவியிடம் கேட்டிருக்கிறார் ஷெரீஃப். 

அடுத்த கட்டுரைக்கு