Published:Updated:

தமிழ் திரைப்படங்களுக்கு தடை : சிங்கள அமைப்பு வலியுறுத்தல்!

தமிழ் திரைப்படங்களுக்கு தடை :  சிங்கள அமைப்பு வலியுறுத்தல்!
தமிழ் திரைப்படங்களுக்கு தடை : சிங்கள அமைப்பு வலியுறுத்தல்!
தமிழ் திரைப்படங்களுக்கு தடை :  சிங்கள அமைப்பு வலியுறுத்தல்!

கொழும்பு: இலங்கையில் தமிழ் நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என இலங்கை திரைப்பட கூட்டுஸ்தாபனத்திடம் ராவண சக்தி என்ற சிங்கள அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இன்று இலங்கை திரைப்பட தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகரவை இன்று சந்தித்த, ராவண சக்தி அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இந்த கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் இது குறித்து தம்மால் முடிவு எடுக்க இயலாது என்றும், அரசு மட்டத்தில்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் காமினி சுமனசேகர தெரிவித்தார்.

##~~##
இந்நிலையில், இலங்கை திரையரங்குகளின் தமிழ்நாட்டு திரைப்படங்கள் திரையிடப்படுவது தடை செய்யப்படாவிட்டால், தாம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதாகவும், ஏற்றுக் கொள்ளாவிட்டால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை தாம் எடுக்கவுள்ளதாகவும் ராவண சக்தி அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.