Published:Updated:

ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது: இலங்கை அரசு

ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது: இலங்கை அரசு
ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது: இலங்கை அரசு
ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்ப்பிக்க முடியாது: இலங்கை அரசு

கொழும்பு: ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்கப்போவதில்லை என்று கூறிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், 6 மாதத்திற்கு ஒரு தடவை ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க அரசு தயாராக இல்லை என்றார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் பெரீஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளோம். மேலும் பலவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். யுத்தம் முடிவடைந்து சில காலமே முடிந்துள்ளது. அதனால் ஜெனீவா தீர்மானத்தை ஏற்க முடியாது என்று அரசின் முடிவை தெளிவாக கூறியுள்ளோம்.

ஜெனீவா தீர்மானத்தில் செப்டம்பரில் நடைபெறும் 24வது மனித உரிமை பேரவை மாநாட்டில் அறிக்கை சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. 6 மாதத்துக்கு ஒரு தடவை அறிக்கை சமர்ப்பிக்க  அரசு  தயாராக இல்லை. அரசின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் கிடையாது.

##~~##
சமாதானம் நிலவும் நாட்டில் பிரச்னை இருப்பதாக கூறி தலையீடு செய்ய முயல்கின்றனர். நவநீதம்பிள்ளையின்  அறிக்கையை ஆராயவும் அமெரிக்க தலையீட்டை அனுமதிக்கவும், இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தவும், தருஸ்மன் அறிக்கை குறித்தும் கவனம் செலுத்துமாறும் ஜெனீவா தீர்மானத்தில்  கோரப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக நிராகரித்துள்ளோம்.
ஜெனீவா தீர்மானம் குறித்து எங்கும் பேச்சு நடத்தப்படவில்லை. எந்த நாட்டின் ஆலோசனையும் எமக்குத் தேவையில்லை. நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளில் காணி விவகாரம் சிக்கலானது என்றார் பெரீஸ்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, "நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகள் முழுமையாக செயற்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் உடன்பாட்டுடன் அரசு செயற்பட வேண்டும்" என்றார்.