Published:Updated:

கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

சத்யா கோபாலன்
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு வழங்கும் கிரீன் கார்டுகளில் பல்வேறு புதிய விதிமுறைகளைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது. 

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து வெளிநாடுகளிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்குப் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுவருகின்றன. முன்னதாக ஹெச் ஒன் பி, ஹெச் 4 விசா போன்ற வெளிநாட்டவருக்குச் சலுகைதரும் விசாக்களில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டது. அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காகவே இதுபோன்ற நடைமுறைகள் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு விளக்கம் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து, தற்போது அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள், அரசு சார்ந்த எந்தச் சலுகைகளையும் பெறக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே கிரீன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படும் முதன்மைச் சலுகைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டு அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ அமெரிக்காவில் நிரந்தர கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள், அரசால் வழங்கப்படும் சலுகைகளைப் பெறும் நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் ” என்று கூறப்பட்டுள்ளது. இதனால், பல இந்தியர்களுக்கு கிரீன் கார்டு மறுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.