Published:Updated:

`அவள் கர்ப்பமானது பிடிக்கவில்லை' - 7 மாத கர்ப்பிணியைக் கொலை செய்த கென்ய கவர்னர்!

`அவள் கர்ப்பமானது பிடிக்கவில்லை' - 7 மாத கர்ப்பிணியைக் கொலை செய்த கென்ய கவர்னர்!
`அவள் கர்ப்பமானது பிடிக்கவில்லை' - 7 மாத கர்ப்பிணியைக் கொலை செய்த கென்ய கவர்னர்!

கென்யா கவர்னர் ஒருவர் தனது காதலியைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

கென்யாவின் மிகோரி மாகாண கவர்னராக இருப்பவர் ஒகோத் ஒபாடா. 61 வயதாகும் இவரும், 26 வயது கல்லூரி மாணவியான ஷாரோன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் ஷாரோன் மலைப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார். பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஷாரோன் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். அதேநேரம் 7 மாத கர்ப்பிணியாகவும் அவர் இருந்துள்ளார். தொடர்ந்து கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். கவர்னர் ஒகோத் ஒபாடாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஒபாடாதான் ஷாரோனை கொலை செய்தது தெரியவந்தது. அதை அவரும் ஒப்புக்கொண்டார். போலீஸார் நடத்திய டி.என்.ஏ சோதனையில் ஷாரோனின் குழந்தையுடைய டி.என்.ஏ-வும் ஒபாடாவின் டி.என்.ஏ-வும் ஒத்துப்போனது. உடனடியாக அவரைக் கைது செய்த கென்ய போலீஸார் அவரைச் சிறையில் அடைத்தனர். 

விசாரணையில், `ஷாரோன் கர்ப்பமானது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவளைக் கொன்றேன்' என அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கவர்னரின் பாதுகாவலர்கள் இரண்டு பேர், இரண்டு அதிகாரிகள் மற்றும் அவரது டிரைவர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கவர்னரின் கைது கென்யாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கவர்னர் ஒகோத் தவறு செய்திருக்கமாட்டார். அவரை விடுதலை செய்யுங்கள் எனக் கூறி  அவரது ஆதரவாளர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மிகோரி மாகாணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.