Published:Updated:

`21-ம் நூற்றாண்டின் ஐகான்' - சாதித்த எஃகு ஜாம்பவான் சஞ்சீவ் குப்தா!

`21-ம் நூற்றாண்டின் ஐகான்' - சாதித்த எஃகு ஜாம்பவான் சஞ்சீவ் குப்தா!
`21-ம் நூற்றாண்டின் ஐகான்' - சாதித்த எஃகு ஜாம்பவான் சஞ்சீவ் குப்தா!

21-ம் நூற்றாண்டின் ஐகான் என்ற விருதை வென்றுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எஃகு ஜாம்பவான் சஞ்சீவ் குப்தா.

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஜி.எஃப்.ஜி குரூப் ஸ்டீல் நிறுவனம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சஞ்சீவ் குப்தா, இந்த நிர்வாகத்தின் நிர்வாக அலுவலராக இருக்கிறார். எஃகு ஜாம்பவான் என அழைக்கப்படும் இவர், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்தவர். ஜி.எஃப்.ஜி குரூப் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் ஸ்டீல் ஏற்றுமதி, சுரங்கம், ரீ-சைக்கிளிங்கில் எனப் பல்வேறு தொழில்களில் சாதனை புரிந்து வருகிறார். சர்வதேச அளவில் உலோகம், தொழிற்சாலைகள், எரிசக்தி மற்றும் நிதி சேவைகளில் திறம்பட செயல்பட்டு வெற்றி பெற்றதற்காக இவருக்கு 21-ம் நூற்றாண்டின் ஐகான் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. எலைட் லண்டன் பங்கு பரிவர்த்தனை குழுவானது, இந்த விருதை சஞ்சீவ் குப்தாவுக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளது. 

லண்டனில் நடைபெற்ற விழாவில் சஞ்சீவுக்குப் பதிலாக அவரின் தந்தை பி.கே.குப்தா இந்த விருதை பெற்றுக்கொண்டார். விருது குறித்து பேசிய சஞ்சீவ், ``உலகளாவிய ஜி.எஃப்.ஜி குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் இது. எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் எங்களுக்கு அங்கீகாரம் அளித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் இளைஞனாக இருக்கும்போது நிறைய ஊக்கம் அளிக்கும் விஷயங்களைப் பெற்றுள்ளேன். அது எங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. ஆனால், இப்போது அளிக்கப்பட்டுள்ள விருது அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க உதவும்" எனக் கூறியுள்ளார்.