Published:Updated:

எருமைகளால் ரூ.23 லட்சம் திரட்டிய இம்ரான் கான் - போட்டிப்போட்டு வாங்கிய நவாஸ் ஆதரவாளர்கள்!

எருமைகளால் ரூ.23 லட்சம் திரட்டிய இம்ரான் கான் - போட்டிப்போட்டு வாங்கிய நவாஸ் ஆதரவாளர்கள்!
எருமைகளால் ரூ.23 லட்சம் திரட்டிய இம்ரான் கான் - போட்டிப்போட்டு வாங்கிய நவாஸ் ஆதரவாளர்கள்!

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானை மீட்க அந்நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள இம்ரான் கான் பல்வேறு கட்ட நடவடிக்கைளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாகக் கடந்த ஆட்சிக் காலத்தில் அரசு அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்கள், விலையுர்ந்த பொருள்கள் ஆகியவற்றை ஏலத்தில் விட முடிவு செய்தார்.

எருமைகளால் ரூ.23 லட்சம் திரட்டிய இம்ரான் கான் - போட்டிப்போட்டு வாங்கிய நவாஸ் ஆதரவாளர்கள்!

இதில் கிடைக்கும் லாபத்தை அரசு கஜானாவில் சேர்க்கும் வகையில் முதலில் சொகுசுக்கார்கள், ஹெலிகாப்டர் ஆகியவை ஏலம் விடப்பட்டன. இஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் நடந்த ஏலத்தில் குண்டு துளைக்காத கார்கள், விலையுயர்ந்த சொகுசுக் கார்கள் என 100 வாகனங்கள் ஏலத்துக்கு வைக்கப்பட்டன. ஆனால், வாகனங்கள் மிகவும் பழையதாக இருந்ததால் பலரும் ஏலம் எடுக்கவில்லை. முதல் நாளில் 61 வாகனங்கள் மட்டும் 1.6 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்டது. 

இதனால் இம்ரான் கான் அதிர்ச்சியடைந்தாலும் தனது முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து ஏல நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் நவாஸ் ஷெரிஃப் பிரதமராக இருந்தபோது உணவுத் தேவைக்காகப் பிரதமர் அலுவலகத்தில் எட்டு எருமை மாடுகள் பராமரிக்கப்பட்டுவந்தன. இந்த எருமை மாடுகளைத்தான் தற்போது இம்ரான் ஏலம் விட்டுள்ளார். இம்ரானின் கணிப்பைவிட இந்த எருமை மாடுகள் அதிக விலைக்குப் போயுள்ளன. ஒவ்வொன்றும் இரண்டு லட்சம், மூன்று லட்சம் ஏலம் விடப்பட்டன. எட்டு எருமை மாடுகளும் மொத்தம் 23 லட்சத்துக்கு ஏலம் போயின. இதைப் பெரும்பாலும் நவாஸ் ஷெரிஃப்பின் ஆதரவாளர்களே வாங்கினர். ஷெரிஃப்பின் ஆதரவாளரான காப் அலி என்பவர் 3,85,000 கொடுத்து ஒரு எருமை மாட்டை வாங்கியுள்ளார். ``நவாஸ் மீதான பாசத்தின் காரணமாகவே இந்த மாடுகளை வாங்கினேன்" எனக் காப் அலி தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.