Published:Updated:

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் கைது எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் கைது எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் கைது எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக உள்ளே நுழையும் இந்தியர்களின் கைது எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

டொனால்ட் ட்ரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற நாள்முதலே அமெரிக்கர்களுக்கே முதல் உரிமை என்ற கொள்கையின்படி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, ஹெச்.1 விசா, வெளிநாட்டவர்கள் குடியேற்றம் உள்ளிட்ட அனைத்திலும் தீவிர நடவடிக்கைகளை ட்ரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது. இப்படியான நிலையில், சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கையில், `அமெரிக்கா - மெக்சிகோ இடையிலான எல்லை வழியில் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த  2017-ம் ஆண்டில் 3,162 பேர் சட்ட விரோதமாக உள்ளே நுழைந்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 9,000 பேர் மெக்சிகோ எல்லை வழியாக நுழைந்துள்ளனர். அதோடு, மெக்சிகோ எல்லைப் பகுதியில் 3 மைல் நீளமான வேலியை 4,000 இந்தியர்கள் கடக்க முயன்றுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார். 

இந்த விவகாரம் குறித்து வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.