Published:Updated:

`விடுதலைப் புலிகள் மீதான பயத்தால் நாட்டைவிட்டு வெளியேறினோம்' - சிறிசேனா சொல்லும் அதிர்ச்சி பின்னணி!

`விடுதலைப் புலிகள் மீதான பயத்தால் நாட்டைவிட்டு வெளியேறினோம்' - சிறிசேனா சொல்லும் அதிர்ச்சி பின்னணி!
`விடுதலைப் புலிகள் மீதான பயத்தால் நாட்டைவிட்டு வெளியேறினோம்' - சிறிசேனா சொல்லும் அதிர்ச்சி பின்னணி!

விடுதலைப் புலிகள் தாக்கிவிடுவார்கள் என்ற பயத்தால் 2009-ம் ஆண்டு நான், ராஜபக்சே உள்ளிட்டோர் கொழும்புவை விட்டு வெளியேறினோம் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஐ.நா மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் மாகாணத்தில் நேற்று அமெரிக்க வாழ் சிங்களர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் அவர் பேசினார். அதில், ``2009-ம் ஆண்டு இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகள் இடையே இறுதிப்போர் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது சென்னையிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் விமானம் மூலம் கொழும்புவை விடுதலைப் புலிகள் தாக்கத் திட்டமிட்டுள்ளதாக முக்கியமான தகவல் வந்தது. முக்கியமான தலைவர்கள் வீட்டைக் குறிவைத்து தாக்குதல் நடத்த உள்ளதாகத் தகவல் வந்தது. அப்போது நான் ராணுவ அமைச்சராக இருந்தேன். 

இதையடுத்து அதிபர், பிரதமர், அமைச்சர்கள் என அனைவரும் நாட்டைவிட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தேன். நானும் கொழும்பு நகரை விட்டு வெளியே இருந்தேன். வேறு இடத்தில் தங்கி நிலவரங்களைக் கவனித்தேன். இது என்னைவிட வேறு யாருக்கும் அதிகம் தெரியாத ரகசியம். பின்னர் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இத்திட்டத்தைப் புலிகள் கைவிட்டதாகத் தகவல் கிடைத்தது" எனக் கூறினார்.