Published:Updated:

அமெரிக்காவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 140 பேர் காயம்

விகடன் விமர்சனக்குழு
அமெரிக்காவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 140 பேர் காயம்
அமெரிக்காவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 140 பேர் காயம்

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மராத்தான் போட்டி நடந்த இடத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 

அமெரிக்காவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 3 பேர் பலி, 140 பேர் காயம்

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த மராத்தான் போட்டியில், வெற்றிக்கோட்டிற்கு அருகே முதல் வெடிகுண்டு வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வையாளர்கள் சிதறி ஓடினர். அப்போது 2வது குண்டு வெடித்தது.

இந்த நிலையில் மூன்றாவது வெடிகுண்டு, ஜான் எஃப் கென்னடி நூலகம் அருகே வெடித்தது. இந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து தண்டிப்போம் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

##~~##
குண்டுவெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உள்ளிட்ட பல சர்வதேச தலைவர்கள்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2001ஆம் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை, அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதித் தாக்கியதில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் அமெரிக்கா, பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்து, தீவிரவாத சம்பவங்களை கட்டுப்படுத்தியது.
இந்த நிலையில் 12 ஆண்டுகளுகளுக்கு பிறகு தீவிரவாதிகள் மீண்டும் தொடர் குண்டுவெடிப்பை அரங்கேற்றியுள்ளது அமெரிக்க மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.