Published:Updated:

பாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி!

பாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி!
பாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி!
பாகிஸ்தான் தேர்தல்: முஷாரப்பின் 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தாக்கல் செய்த 4 வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் வருகிற மே 11 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் முன்னாள் அதிபர் முஷாரப், இஸ்லாமாபாத், கசூர், சித்ரால், கராச்சி என நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். இதில் சித்ரால் தொகுதியை தவிர மற்ற மூன்று தொகுதிகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

##~~##
இந்நிலையில் சித்ரால் தொகுதியிலும் இன்று அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதனால் முஷராப் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.