Published:Updated:

கைது செய்யப்பட்டார் பாக். முன்னாள் அதிபர் முஷாரப்

கைது செய்யப்பட்டார் பாக். முன்னாள் அதிபர் முஷாரப்
கைது செய்யப்பட்டார் பாக். முன்னாள் அதிபர் முஷாரப்
கைது செய்யப்பட்டார் பாக். முன்னாள் அதிபர் முஷாரப்

இஸ்லாமாபத்தில் உள்ள பண்ணை வீட்டில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று கைது செய்யப்பட்டார்.

2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்திய போது தலைமை நீதிபதி இப்திக்கார் முகமது சௌதிரி உள்ளிட்ட 60 நீதிபதிகளை கைது செய்ய அப்போது அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரப் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நீதிபதிகளை வீட்டுக்காவலில் வைத்த வழக்கில், ஜாமீனை நீட்டிக்கக் கோரி, முஷாரப், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

##~~##
அவரது ஜாமீன் நீட்டிப்பு மனுவை நீதிபதி ஷௌகத் ஆசிஸ் சிதிக் நேற்று நிராகரித்ததோடு, உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவரை கைது செய்ய போலீசார் முயன்ற போது, முஷாரப் அவர்களிடமிருந்து காரில் தப்பிச்சென்றார்.
தப்பிச் சென்ற முஷாரப் அவரது பண்ணை வீட்டில் இருந்ததால் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே, இஸ்லாமாபாத் காவல்துறையினரிடம் இன்று காலை சரணடைந்த முஷாரப் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், முஷாரப் கைதை கண்டித்து அவரது கட்சியினர் தொடர் போராட்டத்தி்ல் ஈடுபட முடிவு செய்துள்ளதால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவி வருகிறது.