Published:Updated:

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் பலி!

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் பலி!
பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் பலி!
பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் பலி!

பாஸ்டன்: பாஸ்டன் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காவலர் ஒருவர் பலியானார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பல்கலைக்கழத்தின் இணைய தளத்தில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாஸ்டன் நகரில் கடந்த 15ம் தேதி மராத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தில் 3 பேர் பலியாகியதை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டுள்ளது.

##~~##
பல்கலைக்கழகத்தை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். மேலும் பல்கலைக்கழகத்திற்கு மேல் ஹெலிகாப்டர் ரோந்து சுற்றி வருகிறது.
இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.