Published:Updated:

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி:  மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பழிக்குப் பழியாக தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன், பாகிஸ்தான் தாலிபான் தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திருக்கு முன்பே, பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியாவில் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தெரிக் இ தாலிபன் இயக்கத்தின் ரகசிய பிரிவான ஜுண்டுல்லா தீவிரவாதிகள் ஐதராபாத் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களில் ஊடுருவி இருப்பதாக கூறியுள்ள உளவுத் துறை, மேலும் அவர்கள் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

##~~##
கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பல்வேறு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லைப் பகுதியில் ஊடுருவி இருப்பதாகவும், பாகிஸ்தான் மட்டுமல்லாது ஜெர்மனியைச் சேர்ந்த தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.