Published:Updated:

பாஸ்டன் குண்டு வெடிப்பு: சந்தேக குற்றவாளிகளில் ஒருவர் சுட்டுக்கொலை!

பாஸ்டன் குண்டு வெடிப்பு: சந்தேக குற்றவாளிகளில் ஒருவர் சுட்டுக்கொலை!
பாஸ்டன் குண்டு வெடிப்பு: சந்தேக குற்றவாளிகளில் ஒருவர் சுட்டுக்கொலை!

நியூயார்க்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த 2 சந்தேக குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

பாஸ்டன் குண்டு வெடிப்பு: சந்தேக குற்றவாளிகளில் ஒருவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த 15 ஆம் தேதி மராத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து 3 பேர் உயிர் இழந்தனர். 176 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து விசாரணையில் போலீசாருக்கு ஒரு புதிய துப்பு கிடைத்தது.

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள ஒரு கடையில் வைத்திருந்த கேமிராவில் பதிவான வீடியோ காட்சி எப்.பி.ஐ. போலீசாரிடம் சிக்கியது. வீடியோவை பார்த்த போலீசார், மர்ம நபர்கள் இரண்டு பேர் மீது சந்தேகம் அடைந்தனர். இதனை அடுத்து சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேரது போட்டோ மற்றும் வீடியோவை எ.பி.ஐ. அதிகாரிகள் வெளியிட்டனர்.. மேலும், இது குறித்து பொதுமக்கள் தகவல் தருமாறும் போலீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உலகப்புகழ் பெற்ற மாசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழகம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக் கழகத்தினுள் நுழைந்த மர்ம மனிதன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

ஏற்கனவே, குண்டு வெடிப்பு சம்பவத்தால் அமைதியிழந்திருக்கும் பாஸ்டன் நகரில் மீண்டும் நடைபெற்றிருக்கும் தாக்குதல் சம்பவம் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார், பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி வளைத்து மர்ம மனிதனை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

##~~##
போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற 2 மர்ம மனிதர்கள் கருப்பு நிற காரில் தப்பிச் சென்றனர். போலீசாரும் வாகனங்களில் விரட்டிச் சென்றனர். அப்போது, போலீஸ் வாகனங்களின் மீது வெடிகுண்டுகளை வீசி மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, மர்ம மனிதர்கள் சென்ற காரை சுற்றி வளைத்த போலீசார், காரினுள் துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில், ஒருவர் பலியானார். அந்த நபர் பாஸ்டன் குண்டு வெடிப்பு தொடர்பாக போலீசார் தேடி வந்தவர்களில் ஒருவனான கருப்புத் தொப்பி ஆசாமி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தப்பியோடிய வெள்ளை தொப்பி ஆசாமியை பிடிக்க போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.