ஒரு புகைப்படத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியவர், நிக் உட். இவர் எடுத்த ஒற்றைப் புகைப்படம்தான், வியட்நாம் மீதான அமெரிக்கப் போரின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்தியது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய, 9 வயதுச் சிறுமி கிம் ஃபுக்கின் புகைப்படத்தை எடுத்த நிக் உட், கடந்த வாரம் கேரளா வந்திருந்தார். நிக் உட்டின் வருகையை மிகப்பெரிய திருவிழாவாகக் கொண்டாடியது கேரள அரசு. முதலமைச்சர் பினராயி விஜயன், நிக் உட்டை வரவேற்க, நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், எழுத்தாளர் அருந்ததிராய் எனப் பலரும் அவரைச் சந்தித்துப் பேசினார்கள். கேரளாவின் பல பகுதிகளுக்கும் சென்று வந்த நிக் உட்டை கோழிக்கோட்டில் நானும் சந்தித்தேன்.

``வணக்கம். உங்களைப் பற்றி விரிவாகச் சொல்லுங்களேன்...’’

``அப்பா விவசாயி. அம்மா இல்லத்தரசி. நாங்கள் பத்துப் பேர். ஒன்பது சகோதரர்கள், ஒரு சகோதரி. மூத்த சகோதரர், அசோசியேட்டட் பிரஸ் (AP) நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராக வேலைபார்த்துவந்தார். வியட்நாம் போரைப் படம்பிடித்துக்கொண்டிருந்தவர், எதிர்பாராதவிதமாக, போர்க்களத்தில் குண்டு துளைத்து இறந்துபோனார். குடும்பம் தத்தளிக்க ஆரம்பித்தது. குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது. `எங்க அண்ணனோட வேலையை எனக்குக் கொடுங்க’ என்று ஏ.பி நிறுவனத்திடம் போய்க் கேட்டேன். அப்போது எனக்கு 16 வயதுதான். சிறுவனாக இருந்தேன் என்பதால், எனக்கு வேலை தரவில்லை. நான்கு வருடங்கள் கழித்து `குடும்பம் மிகவும் கஷ்டப்படுகிறது. நீங்கள் வேலை தந்தால்தான் என் குடும்பம் வாழ முடியும்’ என்று மீண்டும் போய்க் கெஞ்சினேன். வேலை கிடைத்தது. ஏ.பி நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு ஒரு புகைப்படம்கூட நான் எடுத்ததில்லை. நான் ஒரு `ஆக்ஸிடென்டல்’ போட்டோகிராஃபர்!’’

``அந்த வரலாற்றுத் தருணம்..?’’

``என் நண்பர் ஒருவர் `நேபாம்’ என்கிற இடத்தில் நான்கைந்து நாள்களாகச் சண்டை நடந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். போர்க்களத்துக்குப் போனேன். எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் இறைந்து கிடந்தன. ஊரெங்கும் அழுகுரல், மரண ஓலம். மக்கள் என் கண் முன்னால் அநாதைகளைப்போல இறந்து கிடந்ததைப் பார்த்ததும் அழுகை வர ஆரம்பித்துவிட்டது. அழுதுகொண்டே நடந்து சென்றுகொண்டிருந்தேன். நான்கு நாள்களாகச் சண்டை நடந்துகொண்டிருந்ததால், யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என நினைத்தேன். ஆனால், திடீரென கிம் ஃபுக் மற்றும் இரண்டு, மூன்று சிறுவர்கள் அழுதவாறே ஓடி வந்துகொண்டிருந்தார்கள். நான் அதிர்ந்துவிட்டேன். கிம் ஃபுக்கின் பாட்டியும் கையில் ஒருவயதுக் குழந்தையுடன் ஓடிவந்துகொண்டிருந்தார். `ஹெல்ப்... ஹெல்ப்!’ என்று கத்தியபடியே, அந்த மூதாட்டி என்னை நோக்கி வந்தார். நான் படமெடுத்தவாறே அவரின் கையில் இருந்த குழந்தையைப் பார்த்தேன். குழந்தை இறந்துபோயிருந்தது. போர்க்களத்தின் வலியை அந்தத் தருணத்தில்தான் உணர்ந்தேன்.

கிம் ஃபுக்கின் உடல் முழுக்க ரத்தம். உடனடியாக துணியால் அவளின் உடலைச் சுற்றி மூடினேன். அவளுடன் ஓடிவந்த சிறுவர்களையும் என் காரிலேயே ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன். மருத்துவர்களோ, `இங்கே உள்ள மருந்துகளால் இந்தச் சிறுமியைக் காப்பாற்ற முடியாது’ என்று எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாமல் பதிலளித்தனர். நானோ, `இந்தச் சிறுமி செத்துக்கொண்டிருக்கிறாள். ஏதாவது செய்யுங்கள்’ என்று கத்தினேன். எனது மீடியா அடையாள அட்டையை எடுத்துக் காட்டி, `இவள் செத்துப்போனால், நாளை நீங்கள் மிகப்பெரிய பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என எச்சரித்தேன். மீடியா என்றதும் பயந்துபோய் கிம் ஃபுக்கை மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஒருவழியாக அவள் உயிர் பிழைத்தாள். அதுமட்டும் நடக்காமல் போயிருந்தால் கெவின் கார்ட்டர்போல நானும் தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன்.’’ (சூடான் பஞ்சத்தின்போது சிறுமியைக் கொத்திச் சாப்பிடக் காத்திருக்கும் கழுகின் புகைப்படத்தை எடுத்தவர் கெவின் கார்ட்டர். ‘சிறுமியைக் காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்தது அறம்தானா?’ என்று எழுந்த கேள்விகள் இதயத்தைத் துளைக்க, தற்கொலை செய்துகொண்டார்.)

அந்தக் கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

“அதன்பிறகு ஏற்பட்ட எதிர்வினைகள்..?’’

``1972-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். அடுத்த நாள் உலகம் முழுக்க உள்ள பத்திரிகைகளில் `நேபாம் கேர்ள்’ புகைப்படம் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. வியட்நாம் போரை நிறுத்தக்கோரி உலகெங்கும் மக்கள் போராட்டம் வெடித்தது. லண்டன், பாரீஸ், டோக்கியோ நகரங்கள் போராட்டக் களமானது. வாஷிங்டன் மக்கள், வெள்ளைமாளிகையை முற்றுகையிட்டனர். என்னையும் கிம் ஃபுக் கையும் உலகுக்கு அடையாளம் காட்டியது இந்தப் புகைப்படம்தான். வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவியதும் அந்தப் புகைப்படம்தான்’’

``கிம் ஃபுக்கை அதன்பிறகு சந்தித்தீர்களா?’’

``பல முறை சந்தித்திருக்கிறேன். அவரும் இப்போது பாட்டியாகிவிட்டார். கனடாவில் வசிக்கும் கிம் ஃபுக், ஐ.நா-வின் அமைதித் தூதராகப் பணியாற்றுகிறார். அடுத்த முறை இந்தியா வரும்போது நிச்சயம் அவரையும் அழைத்துவருவேன்.’’

``இந்தியச் சுற்றுப்பயணம் எப்படியிருக்கிறது?’’

``மக்கள் என்னை அடையாளம் கண்டுகொண்டதே ஒரு வெற்றிதானே! நடிகர் மம்முட்டி, தான் சேகரித்த அபூர்வமான சில பொருள்களை எனக்குக் காட்டினார். மோகன்லால் என்னுடன் உணவருந்தினார். கோட்டயத்தில் எழுத்தாளர் அருந்ததிராயைச் சந்தித்தேன். என்னைக் கண்டதும் `வெல்கம் நிக்’ என்றவாறே கட்டியணைத்துக்கொண்டார். வியட்நாமியர்களுக்காகப் புத்தகம் ஒன்றை மொழியாக்கம் செய்துவருவதாகவும், அது தொடர்பாக வியட்நாம் வரப்போவதாகவும் என்னிடம் சொன்னார். பிரபலங்கள் எனக்கு நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.’’