Published:Updated:

பாஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதரர்கள்: புதிய தகவல்

பாஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதரர்கள்: புதிய தகவல்
பாஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதரர்கள்: புதிய தகவல்

நியூயார்க்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதரர்கள் என தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கடந்த 15 ஆம் தேதி மராத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற போது அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து 3 பேர் உயிர் இழந்தனர். 176 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து விசாரணையில் போலீசாருக்கு ஒரு புதிய துப்பு கிடைத்தது.

பாஸ்டன் நகரில் குண்டு வைத்தது ரஷ்ய சகோதரர்கள்: புதிய தகவல்

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள ஒரு கடையில் வைத்திருந்த கேமிராவில் பதிவான வீடியோ காட்சி எப்.பி.ஐ. போலீசாரிடம் சிக்கியது. வீடியோவை பார்த்த போலீசார், மர்ம நபர்கள் இரண்டு பேர் மீது சந்தேகம் அடைந்தனர். இதனை அடுத்து சந்தேகத்திற்கு இடமான இரண்டு பேரது போட்டோ மற்றும் வீடியோவை எ.பி.ஐ. அதிகாரிகள் வெளியிட்டனர்.

இவர்களில் கருப்பு தொப்பி அணிந்திருந்தவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். வெள்ளை தொப்பி அணிந்திருந்த 2வது நபரின் பெயர் ட்சோகர் ட்சர்னயேவ் (19) என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

##~~##
இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என்றும் ரஷ்யாவில் உள்ள செசன்யா மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இவர்கள், யாருடைய தூண்டுதலின் பேரில் பாஸ்டன் நகரில் தாக்குதல் நடத்தினார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாட்டர் டவுன் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளை தொப்பி நபர் தங்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் போலீசார் வீடுவீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ரஷ்யாவை சேர்ந்த இவர்களுக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.
இதனிடையே சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பு தொப்பி ஆசாமியின் உடலில் வெடிகுண்டு கட்டப்பட்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.