உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டிவருகின்றன. இதனால் உள்நாட்டு மக்கள் உயிருக்கு பயந்து வெளி நாடுகளுக்கு இடம்பெயர்ந்தவருகின்றனர்.

உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், உக்ரைன் ரஷ்யா இடையில் நடைபெற்றுவரும் இந்தக் கடுமையான போரில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. இந்தப் போரில் 4,300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism