Published:Updated:

PUBG விளையாட்டில் ஏற்பட்ட தொடர் தோல்வி;தன் குடும்பத்தையே கொன்ற 14 வயது சிறுவன்; அதிர்ச்சிப் பின்னணி

PUBG செயலி

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாகாணத்தில் PUBG விளையாட்டால் ஏற்பட்ட தொடர் தோல்வியின் விரக்தியால் தன் தாய் உட்பட தனது மூன்று உடன்பிறந்தவர்களையும் கொன்ற 14 வயது சிறுவன்.

PUBG விளையாட்டில் ஏற்பட்ட தொடர் தோல்வி;தன் குடும்பத்தையே கொன்ற 14 வயது சிறுவன்; அதிர்ச்சிப் பின்னணி

பாகிஸ்தானில் உள்ள லாகூர் மாகாணத்தில் PUBG விளையாட்டால் ஏற்பட்ட தொடர் தோல்வியின் விரக்தியால் தன் தாய் உட்பட தனது மூன்று உடன்பிறந்தவர்களையும் கொன்ற 14 வயது சிறுவன்.

Published:Updated:
PUBG செயலி

'PlayerUnknown’s Battlegrounds' எனும் PUBG செயலியில் விளையாடும்போது தொடர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தனது தாயின் கைத்துப்பாக்கியை எடுத்து தன் தாய் உட்பட தன்னுடன் பிறந்த மூன்று உடன் பிறப்புகளையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் 14 வயதான சிறுவன். அதன் பின் அந்தச்சிறுவன் கைத்துப்பாக்கியை அருகிலுள்ள ஏரியில் எறிந்துவிட்டு, சம்பவம் நடந்தபோது தான் தூங்கிக் கொண்டிருப்பது போல் பாசாங்கு செய்ய தனது அறைக்குத் திரும்பினார். அவரது குழப்பமான உடல் மொழியில் இருந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது அந்தச் சிறுவன்தான் இதை செய்தான் என்று காவல் துறையினர் உறுதி செய்தனர்.

பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்துக் கூறும் பாகிஸ்தான் காவல் துறையினர் , "PUBG க்கு அடிமையான சிறுவன் விளையாடினால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாகத் தனது தாய் மற்றும் உடன்பிறப்புகளைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதால் அவர் சில உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறார்" என்று கூறினார்கள்.

சமீப காலங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை வழக்குகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் இது போன்ற விளையாட்டுச் செயலிகளைத் தடை செய்யுமாறு இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு பரிந்துரைகளை அனுப்ப பாகிஸ்தான் காவல்துறை முடிவு செய்துள்ளது.

PUBG விளையாட்டின் படம்
PUBG விளையாட்டின் படம்

சீனாவின் செயலியான PUBG உலகமெங்கும் பல மில்லியன் மக்களால் பதிவிறக்கம் செய்து விளையாடப்பட்டு வருகிறது. அதேநேரம் இந்த PUBG பல கொலைச் சம்பவங்களும் வன்முறைகளும் மனஅழுத்தமும் ஏற்பட காரணமாக உள்ளது . இந்த PUBG செயலியை உலகில் பல நாடுகள் தடைசெய்து வருகின்றன. இந்தியா, சீனா, ஈராக், ஜோர்டன் போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமாகத் தடை செய்திருக்கிறது. குறிப்பாகச் சீனாவில் தயாரான இந்த செயலியைச் சீனாவே தடை செய்துவிட்டது. இந்தியா, PUBG உள்ளிட்ட அனைத்து சீனாவின் செயலிகளையும் கடந்த 2020-ல் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism