Published:Updated:

``என் மகன் 14 வயதில் ட்ரேட் அட்வைஸ் செய்தார்; 2000 டாலர் லாபம்" - எலான் மஸ்க்கின் அம்மா பெருமிதம்

தாயார் மே மஸ்க் உடன் எலான்

"அப்போது உனக்கு 14 வயதிருக்கும், நீ நம்புகிற நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொன்னாய். என்னுடைய பங்குத்தரகர் இது மோசமான ஐடியா எனச் சொன்னார்"

``என் மகன் 14 வயதில் ட்ரேட் அட்வைஸ் செய்தார்; 2000 டாலர் லாபம்" - எலான் மஸ்க்கின் அம்மா பெருமிதம்

"அப்போது உனக்கு 14 வயதிருக்கும், நீ நம்புகிற நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொன்னாய். என்னுடைய பங்குத்தரகர் இது மோசமான ஐடியா எனச் சொன்னார்"

Published:Updated:
தாயார் மே மஸ்க் உடன் எலான்

எலான் மஸ்க்கிடம் ட்விட்டரில் பலரும் கேள்வி கேட்பது வழக்கம். சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்துமிருக்கிறார். முதலீடுகளை எப்படி மேற்கொள்வது என்பதே அவரிடம் அதிகம் கேட்கப்பட்டு வந்த கேள்வி. உலகத்திலேயே அதிக சொத்து மதிப்பு கொண்டவரான எலான் மஸ்க் இந்த கேள்விக்கு கொடுக்கிற பதில் என்னவாக இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அதற்கு எலான் அளித்த பதில், "நீங்கள் நம்புகிற பொருட்களையும் சேவைகளையும் அளிக்கிற நிறுவனங்களின் பங்குகளை வாங்குங்கள். உங்களுக்கு எப்போது அதன் ட்ரெண்ட் பிடிக்கவில்லையோ அப்போது விற்றுவிடுங்கள். மார்க்கெட் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அச்சப்பட வேண்டியதில்லை. அதுதான் நீட்டித்த காலத்துக்கு உதவும்" என ட்வீட் செய்திருந்தார்.

இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள எலான் மஸ்கின் தாயார் மே மஸ்க், எலான் 14 வயதில் இருந்தபோது நடந்த கதை ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். "எலான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, அப்போது உனக்கு 14 வயதிருக்கும், நீ நம்புகிற நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சொன்னாய். என்னுடைய பங்குத்தரகர் இது மோசமான ஐடியா எனச் சொன்னார். அதனால் 1000 டாலர்களுக்கு சமமான மதிப்பில் மட்டுமே நான் பங்குகளை வாங்கினேன். நான் அந்தப் பணத்தை இழக்கவே தயாராக இருந்தேன்."

மேலும்,"அந்த பங்கு 3000 டாலர்கள் அளவுக்கு அதிகரித்தது. பங்குத்தரகர் பயந்து விற்றுவிடுமாறு சொன்னார். நானும் விற்றுவிட்டேன். எலான், உனக்கு அதில் உடன்பாடில்லை. அந்த பங்கு மதிப்பு அதிகரித்துகொண்டே இருந்தது. அதில் வந்த இலாபத்தை உன் சகோதரி, சகோதரன் உடன் பகிர்ந்து கொடுத்ததும் உனக்கு உடன்பாடில்லை. யார் செய்தது சரி? " எனப் பதிவிட்டு இருந்தார்.

இன்னொரு ட்வீட்டில் மே மஸ்க், தனக்கு பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்பு குறித்து பகிர்ந்திருந்தார். அதனால் 1971-ல் தன்னுடைய மகன் எலான் பெயரில் சிறிய தொகையை முதலீடு செய்துள்ளார். அந்த பணம் தான் 1989-ல் எலான் கனடாவுக்கு போக உதவியாக இருந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism