Published:Updated:

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 32 பேர் பலி

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 32 பேர் பலி
சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 32 பேர் பலி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து 32 பேர் உயிரிழந்தனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

##~~##
இன்று காலை 8 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர்.
600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தூரிதபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
2008ஆம் ஆண்டு இதே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.