Published:Updated:

பாஸ்டன் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது

பாஸ்டன் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது
பாஸ்டன் குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் கைது

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 2வது நபரை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் பாஸ்டனில் மாராத்தன் போட்டியின் போது குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். 170 பேர் படுகாயமடைந்தனர்.

##~~##
இதனையடுத்து அமெரிக்க போலீஸார் பாஸ்டன் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.  அமெரிக்க போலீஸார் குண்டு வெடிப்பு நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை நேற்று சுட்டுக் கொன்றனர். அப்போது உடன் இருந்த இரண்டாவது நபர் அங்கிருந்து தப்பினார்.
இரண்டாவது நபரை பாஸ்டன் அருகே வாட்டர்டவுன் என்ற பகுதியில் மறைந்திருந்த நபரை அமெரிக்க போலீஸார் சுற்றி வளைத்தனர். அந்த நபரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.