Published:Updated:

முஷாரப் காவல் மே 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

முஷாரப் காவல் மே 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு!
முஷாரப் காவல் மே 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு!
முஷாரப் காவல் மே 4 ஆம் தேதி வரை நீட்டிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் காவலை மே 4 ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக துபை மற்றும் இங்கிலாந்தில் வசித்து வந்த முஷாரப், கடந்த மாதம் பாகிஸ்தான் திரும்பினார். இதனை தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.

அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முஷாரப் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில், 2007 ஆம் ஆண்டு நீதிபதிகள் சிறை வைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முஷாரப், இன்று தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முஷாரப் தரப்பு வாதங்களை அவரது வழக்கறிஞர் முன்வைத்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை காவலில் முஷாரப்பை எடுக்க அவரது தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

##~~##
நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ள முஷாரப்பை அவரது பண்ணை வீட்டிலேயே காவல் வைப்பதா அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா என்பது பற்றி உள்ளூர் நிர்வாகம் முடிவெடுக்கும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
முஷாரப் மீது, நீதிபதிகள் சிறை வைக்கப்பட்ட வழக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் பூட்டோ, பலுசிஸ்தான் பழங்குடியின தலைவர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குகளிலும் குற்றச்சாட்டப்பட்டிருக்கிறது.