Published:Updated:

`கைப்பட எழுதிய ஆய்வறிக்கை, வீல் சேர்' - ஏலத்துக்கு வரும் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய பொருள்கள்

சா.ஜெ.முகில் தங்கம்

1965-ம் ஆண்டு அஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய முனைவர் (Ph.D) ஆய்வுக்காகக் கைப்பட எழுதிய ஆய்வறிக்கை. நோய் பாதிக்கப்பட்டு முற்றிலும் உடல் செயலிழந்துப் போவதற்கு முன்பு கடைசியாக அவர் எழுதிய எழுத்துகள் அவை. ஐந்தே பிரதிகள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன.

`கைப்பட எழுதிய ஆய்வறிக்கை, வீல் சேர்' - ஏலத்துக்கு வரும் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய பொருள்கள்
`கைப்பட எழுதிய ஆய்வறிக்கை, வீல் சேர்' - ஏலத்துக்கு வரும் ஸ்டீபன் ஹாக்கிங் பயன்படுத்திய பொருள்கள்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், தன்னுடைய 76 வது வயதில் கடந்த மார்ச் 14-ம் தேதியன்று மறைந்தார். பிக் பேங் தியரி உட்பட இயற்பியலின் மிக முக்கியமான கருத்தாக்கங்களைக் கூறிய ஸ்டீபன் ஹாக்கிங் தன்னுடைய 21 வயதில் Motor Neurone Disease எனும் நோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும் தன்னம்பிக்கையுடன் 76 வயது வாழ்ந்த அவர் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை வீல் சேரில்தான் வாழ்ந்தார். 

தற்போது அவர் பயன்படுத்திய 22 பொருள்கள் ஏலத்துக்கு வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது 1965-ம் ஆண்டு அவர் தன்னுடைய முனைவர் (Ph.D) ஆய்வுக்காகக் கைப்பட எழுதிய ஆய்வறிக்கை. நோய் பாதிக்கப்பட்டு முற்றிலும் உடல் செயலிழந்துபோவதற்கு முன்பு கடைசியாக அவர் எழுதிய எழுத்துகள் அவை. ஐந்தே ஐந்து பிரதிகள் மட்டுமே தற்போது எஞ்சியிருக்கின்றன. இதன் மூலம் ஒரு லட்சம் யூரோவிலிருந்து ஒன்றரை லட்சம் யூரோ வரை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். மேலும், அவர் பயன்படுத்திய பம்பர் ஜாக்கெட், வீல் சேரும் ஏலம் விடப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட அவருடைய வீல் சேர் 10,000 யூரோவிலிருந்து 15,000 யூரோ வரை ஏலத்துக்குப் போகலாம் என்கின்றனர். இந்தப் பொருள்களையெல்லாம் கிறிஸ்டி ஏல விற்பனை நிலையம் இணையத்தில் ஏலம் விடுகிறது. வருகிற அக்டோபர் 31-லிருந்து நவம்பர் 8 வரை ஏலம் நடைபெறுகிறது. 

கிறிஸ்டி ஏலம் விற்பனைய நிலையத்தைச் சேர்ந்த தாமஸ், ``அவருடைய வீல் சேர் என்பது உடல் உறுப்பு குறைபாட்டின் சின்னமல்ல. அது அறிவின் அடையாளம். அவரது நகைச்சுவை உணர்வை நமக்கு உணர்த்தும் அடையாளம்" என்கிறார். ஹாக்கிங்கின் மகள் லூசி, "அப்பாவின் பணியைப் பாராட்டக்கூடிய முன்னுதாரணமாகப் பார்க்கக்கூடியவர் அவருடைய பொருள்களை ஏலம் எடுத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார். இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளைக்கும் (Stephen Hawking Foundation)  மோட்டார் நியூரான்  நோய் சங்கத்துக்கும் (Motor Neurone Disease Association.) அளிக்கப்பட இருக்கிறது.