அவதார் உயிரினங்கள்!

சீனாவில் நடத்தப்பட்ட படிம ஆராய்ச்சியில், டெரோசர் (Pterosaur) எனப்படும் பறக்கும் தன்மையுள்ள ஊர்வன இனத்தைச் சேர்ந்த உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை, சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் எனவும் யூகித்துள்ளனர். இதை, ‘Ikrandraco Avatar’ என்றும் அழைக்கின்றனர். காரணம், ‘அவதார்’ திரைப்படத்தில் ‘இக்ரான்’ என்ற பெயரில் வரும் உயிரினம் இதுபோலத்தான் இருக்கும். இவை, சிறிய மீன் வகைகளை உண்டு வாழ்ந்திருக்க வேண்டும். 2.5 மீட்டர் இறக்கையும் இவற்றுக்கு இருந்துள்ளன. டைனோசர் போன்று இவையும் அழிந்துள்ளன என்கின்றனர்.

தமிழ் வார்த்தை விளையாட்டுகள்!

ஸ்மார்ட்போனிலும் கம்ப்யூட்டரிலும் குறிப்பிட்ட நேரம் கேம்ஸ் விளையாடுவது தவிர்க்கமுடியாத காலமாக மாறிடுச்சு. ஆனால், எப்பவும் ஆக்ஷன், த்ரில்லர் என்றே விளையாடாமல், தமிழ் வார்த்தைகளைக் கற்கவும் சிலவற்றை விளையாடலாம். அதனால், தமிழறிவும் வளரும். அதற்கான சில செயலிகளின் பெயர் இங்கே...

சொல்லி அடி, மாயக்கட்டம், யோசி, ஜிலேபி, தமிழ்ச் சொல் விளையாட்டு, தமிழ்க் குறுக்கெழுத்து, சதுரங்க சடுகுடு, செம்மொழி வேட்டை, புதிர் நானூறு.

மஞ்சள் கண் பெங்குவின்!

அசைந்து அசைந்து நடக்கும் பெங்குவின்களைக் கண்டால், எல்லோரின் மனமும் உற்சாகத்துக்குத் தாவும். தலையை அப்படியும் இப்படியுமா திருப்பி, கருவிழிகளை உருட்டிப் பார்க்கும் அழகே தனி. அரிய வகையாக மஞ்சள் கண்கள்கொண்ட பெங்குவின்களும் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த மஞ்சள் கண் பெங்குவின்கள் நியூசிலாந்தில் காணப்படுகின்றன. முகத்தின் ஒரு பகுதியும் மஞ்சளும் பச்சையும் கலந்ததுபோல பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும். ஆனால், புவிவெப்ப மயம் மற்றும் கடல் நீரில் ஏற்படும் வெப்பத்தால் இந்த இனம் இன்னும் 25 ஆண்டுகளில் முற்றிலும் அழிந்துவிடும் என எச்சரிக்கிறார்கள் அறிவியல் ஆய்வாளர்கள்.

ஆக்சிஜன் டயர்!

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க, பிரபலமான ‘குட் இயர்’ டயர் நிறுவனம், புதுமையான கண்டுபிடிப்பில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனம் புதிதாகத் தயாரித்திருக்கும் டயர்களின் பக்கவாட்டில் பாசிகள் வளர்கின்றன. இந்த டயர் பொருத்திய வாகனங்கள் சாலையில் ஓடும்போது, அங்குள்ள ஈரப்பதம் டயருக்குள் ஈர்க்கப்பட்டு இந்தப் பாசி வளர்கிறது. இது, காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடும். அதுமட்டுமா? அப்போது நிகழும் வேதிவினை மூலம், சிறிதளவு மின்சாரத்தையும் உற்பத்தி செய்யும். பெரும் நகரங்களில் ஓடும் வாகனங்களில் இந்த ஆக்சிஜன் டயர்களைப் பயன்படுத்தினால், ஆண்டுக்கு 4 ஆயிரம் டன் அளவுக்குக் காற்றிலுள்ள கரியமில வாயுவை மறுசுழற்சி செய்யலாம் என்கிறது இந்த நிறுவனம்.

சுரைக்காய்!

உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று. ஆரம்பத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள், நீரை ஊற்றிவைக்கும் பாத்திரமாகத்தான் பயன்பட்டன.

இதன் பூர்வீகம், தென் ஆப்பிரிக்கா. இப்போது, உலகம் முழுக்கப் பயிரிடப்படுகிறது. இதன் மொத்த எடையில் 96% நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருப்பதால், உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. கல்லீரல் பாதிப்பு, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களைத் தடுக்கும் ஆற்றலும் சுரைக்காய்க்கு உண்டு.

தெரியுமா?

சாம்பல் அணில்களின் சரணாலயம், வில்லிபுத்தூரில் அமைக்கப்பட்டுள்ளது.