Published:Updated:

ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றியால் பதவி விலகிய அமைச்சர்!

ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றியால் பதவி விலகிய அமைச்சர்!
ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றியால் பதவி விலகிய அமைச்சர்!
ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் வெற்றியால் பதவி விலகிய அமைச்சர்!

இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது தோல்வியடைந்தது. 

இலங்கையில் நிலவிவரும் கடுமையான அரசியல் குழப்ப நிலையில், நாடாளுமன்றக் கலைப்பு உத்தரவுக்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்தது. அதனால், இந்த உத்தரவுக்கு முன்னர், அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அறிவிக்கையின்படி, இன்று நவம்பர் 14 காலையில் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூர்ய அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டது. 

அதன்படி இன்று காலை கூடிய இலங்கை நாடாளுமன்றத்தில், ஒரு வாரத்துக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் கொடுத்திருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில், மகிந்த ராஜபக்சவின் அரசாங்கமானது பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியவில்லை. நிறைவாக அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் ஜயசூர்ய, ``குரல் வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டார். அவையை நாளை காலைக்குத் தள்ளிவைப்பதாகவும் அறிவித்தார். 

இன்றைய கூட்டத்தில் மகிந்தவின் ஆதரவாளர்கள் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். அதை மீறி வாக்கெடுப்பு நடத்திமுடிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து கடந்த வாரம் திடீரென மகிந்த ராஜபக்ச பக்கம் தாவி, அமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்ட வசந்த சேனநாயக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முடிவை அடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னுடைய விலகல் கடிதத்தை அதிபர் மைத்திரியிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.