Published:Updated:

பங்களாதேஷ்: கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

பங்களாதேஷ்: கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது
பங்களாதேஷ்: கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது
பங்களாதேஷ்: கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது

டாக்கா: பங்களாதேஷில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 300-யை தாண்டியுள்ளது.

தலைநகர் டாக்காவின் புறநகரான சவாரில் ரானா பிளாசா என்ற 8 மாடி கட்டிடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆயத்த ஆடை உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த போது,எதிர்பாராத வகையில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

கடந்த 2 நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்த  மீட்பு பணியில் இதுவரை 304 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக என்று அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

##~~##
2,348 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெற்று வருபவர்களில் 20 பேரது நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.