Published:Updated:

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகள் தாக்குதல்: கோமாவில் சரப்ஜித் சிங்!

பாகிஸ்தான் சிறையில் சக கைதிகள் தாக்குதல்: கோமாவில் சரப்ஜித் சிங்!
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகள் தாக்குதல்: கோமாவில் சரப்ஜித் சிங்!
பாகிஸ்தான் சிறையில் சக கைதிகள் தாக்குதல்: கோமாவில் சரப்ஜித் சிங்!

லாகூர்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித் சிங் மீது சக கைதிகள் சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளி்ல் தொடர்பு இருப்பதாக கூறி, இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

தூக்குத் தண்டனையில் இருந்து சரப்ஜித் சிங்கை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் மத்திய அரசிடம் போராடி வரும் நிலையில், லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை, சக கைதிகள் இரண்டு பேர் தாக்கியுள்ளனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங் கோமா நிலைக்கு சென்றார். உடனடியாக அவர், சிறை வளாகத்திற்குள் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை மோசமானதை அடுத்து ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரப்ஜித் சிங்கின் உயிரைக் காப்பாற்ற அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

##~~##
இதனிடையே, சரப்ஜித் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த நிலையில், சரப்ஜித் சிங் மீதான தாக்குதலை அடுத்து, லாகூர் சிறைக் கண்காணிப்பாளரும், துணைக் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.