Published:Updated:

சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்!

சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்!
சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்!
சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி சரப்ஜித் சிங்  தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தாக்குதலுக்குள்ளான சரப்ஜித் சிங்கை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்தனர்.

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங் சக கைதிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கின் உடல்நிலை மோசமாக உள்ளது.

இது குறித்து கைதிகளிடமும், சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே சரப்ஜித் சிங்கை தாக்கிய  சக கைதிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

##~~##

இந்நிலையில் சரப்ஜித் சிங் அனுமதிக்கப்பட்டுள்ள ஜின்னா மருத்துவமனைக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.