Published:Updated:

அமெரிக்க பல்கலை உரையை புறக்கணித்தார் அகிலேஷ் யாதவ்!

அமெரிக்க பல்கலை உரையை புறக்கணித்தார் அகிலேஷ் யாதவ்!
அமெரிக்க பல்கலை உரையை புறக்கணித்தார் அகிலேஷ் யாதவ்!
அமெரிக்க பல்கலை உரையை புறக்கணித்தார் அகிலேஷ் யாதவ்!

நியூயார்க்: உ.பி. அமைச்சர் பாஸ்டன் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் நிகழ்ச்சியை உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் புறக்கணித்துவிட்டார்.

அகிலேஷ் யாதவுடன் சென்ற அவரது அமைச்சரவை சகாவான அசம் கான், பாஸ்டன் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டார். விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் விசாரணையும் நடத்தினர்.இந்திய தூதரக அதிகாரிகள் அங்கு வந்து பேசியதை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்,

இந்நிலையில் தமக்கு நேரிட்ட இந்த அவமதிப்பை தொடர்ந்து அசம் கான், தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார்.அதே சமயம் அகிலேஷ் யாதவ் அமெரிக்காவிலேயே தங்கியிருந்ததால், அவர் ஒப்புக்கொண்டபடி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
 

##~~##
ஆனால் அமைச்சர் அசம் கான் பாஸ்டன் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கும்பமேளா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் நிகழ்ச்சியை அகிலேஷ் யாதவ் புறக்கணித்துவிட்டார்.