Published:Updated:

சரப்ஜித் சிங் மருத்துவ ரீதியாக மரணம்!

சரப்ஜித் சிங் மருத்துவ ரீதியாக மரணம்!
சரப்ஜித் சிங் மருத்துவ ரீதியாக மரணம்!
சரப்ஜித் சிங் மருத்துவ ரீதியாக மரணம்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங் மூளைச் சாவடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் சென்றுள்ள அவரது சகோதரி தல்பீர் கவுர், சரப்ஜித் சிங்கிற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆலோசனையை பெறுவதற்காக தாம் இந்தியா செல்ல இருப்பதாக சரப்ஜித் சிங்கின் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.

அதே சமயம் சரப்ஜித் சிங்கின் மனைவி மற்றும் 2 மகள்களும் இந்தியா திரும்ப உள்ளனரா என்பது குறித்து தகவல் இல்லை.

##~~##
முன்னதாக பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், கடந்த வாரம் சக கைதிகளால் பலமாக தாக்கப்பட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலைக்கு சென்றார். லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.