Published:Updated:

'போர்க் குற்றத்துக்கு ராஜபக்ஷேவும் பொறுப்பு': விக்கிலீக்ஸ்

Vikatan Correspondent

டிச.2,2010

இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கு அந்நாட்டின் அதிபர் ராஜபக்ஷேவும் பொறுப்பு என அமெரிக்கா உறுதி செய்திருந்த தகவல், விக்கிலீக்ஸ் மூலம் அம்பமாகியுள்ளது. ##~~##

உலக நாடுகளில் உள்ள 247 அமெரிக்க தூதரகங்களில் இருந்து தமது நாட்டுக்கு பரிமாறப்பட்ட ஆயிரக்கணக்கான ரகசிய குறிப்புகள் உள்பட இரண்டரை லட்சம் ஆவணங்களை, புலனாய்வு வலைத்தளமான விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியது.

அந்த ஆவணங்களில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து பகிரப்பட்டவை
3,325.

அதில், நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இலங்கையில் உள்ள அமெரிக்க தூதர் பாட்ரிகா புடெனிஸ், வாஷிங்டனுக்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், பல்வேறு குற்றங்களுக்கு அதிபர் ராஜபக்ஷே, அவரது சகோதரர்கள், எதிர்கட்சி அதிபர் வேட்பாளர் ஃபொன்சேகா உள்ளிட்டோர் தான் பொறுப்பு என்பதே உண்மை என்கிற ரீதியில் அவர் தகவலைப் பரிமாறியுள்ளார்.

மேலும், போர்க் குற்றங்களைச் செய்தவர்களே ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், விசாரணையால் பலனில்லை என்றும் அவர் கூறியிருப்பது விக்கிலீக்ஸ் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களைக் காண... reported in a message from the US envoy in Colombo.