Published:Updated:

சரப்ஜித்சிங் உயிரிழந்தார்: உடல் இந்தியா கொண்டு வரப்படுகிறது

சரப்ஜித்சிங் உயிரிழந்தார்: உடல் இந்தியா கொண்டு வரப்படுகிறது
சரப்ஜித்சிங் உயிரிழந்தார்: உடல் இந்தியா கொண்டு வரப்படுகிறது
சரப்ஜித்சிங் உயிரிழந்தார்: உடல் இந்தியா கொண்டு வரப்படுகிறது

பாகிஸ்தான் சிறையில் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங், லாகூர்‌ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிர் பிரிந்தது. அவரது உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்தியர் சரப்ஜித் சிங்கிற்கு, அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

பாகிஸ்தானின் கோட்லாபாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சரப்ஜித் சிங்கை கடந்த 26ஆம் தேதி சக கைதிகள் கடுமையாக தாக்கினர். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்ட சரப்ஜித் சிங், லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சரப்ஜித்சிங் உயிரிழந்தார்: உடல் இந்தியா கொண்டு வரப்படுகிறது

கடந்த 6 நாட்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சரப்ஜித் சிங் இன்று அதிகாலை 1 மணி அளவில் உயிரிழந்தார்.

சரப்ஜித் சிங்கை சந்திப்பதற்காக லாகூர் சென்ற சரப்ஜித் சகோதரி, மனைவி மற்றும் 2 மகள்கள், நேற்று இந்தியா திரும்பிய நிலையில், சரப்ஜித் சிங் உயிரிழந்தது குடும்பத்தினரை சோகத்தி்ல் ஆழ்த்தியுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், சரப்ஜித் உயிரிழந்த தகவலை ஜின்னா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

##~~##
இந்த நிலையில், சரப்ஜித் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக நாடே கவலை அடைந்துள்ளது. சரப்ஜித் சிங் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும். சரப்ஜித் சிங் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதி அளித்துள்ளது.