Published:Updated:

ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?
பிரீமியம் ஸ்டோரி
News
ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

வேலைவாய்ப்பு

ந்தியாவின் வேலைவாய்ப்பினைப்  பொறுத்தவரை, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஐ.டி துறை மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்துவருகிறது. இப்படியான சூழலில்தான், கடந்த சில ஆண்டுகளாக ஆட்டோமேஷன் எனும் ரோபாட்டிக் தொழில்நுட்பம் துரித வளர்ச்சி பெறத் தொடங்கியது. அதன் எதிரொலியாக, இந்தத் துறையில் கணினி துறையில் வேலைவாய்ப்புகள் குறையும் என்கிற சந்தேகம் எழுந்தது. இனி, இந்த ஐ.டி. துறையின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று எல்லோரும் பயந்துகொண்டிருந்த சமயத்தில், இந்த நிதியாண்டிலும் ஐ.டி துறையில் 1 லட்சம் பேருக்குக் கூடுதலாக வேலைவாய்ப்புகள் இருக்கும் என்று நாஸ்காம் அறிவித்துள்ளது. இந்தத் துறையில் ஏற்கெனவே 39 லட்சத்து 7 ஆயிரம் பேர் இந்தியா முழுக்க பணியாற்றிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு புள்ளிவிவரம், 2018-22-ம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில் இந்தியாவில் மட்டும் புதிதாக 1.31 கோடி வேலைவாய்ப்புகள், மொத்தம் 17 துறைகளில் கிடைக்க வாய்ப்புள்ள தாகத் தெரிவிக்கிறது. இந்த வேலைவாய்ப்புகளில் ஐ.டி துறை சார்ந்த வேலை வாய்ப்புகளும் குறிப்பிட்ட பங்கு வகிக்கின்றன.

ஐ.டி துறையில் எத்தகைய பணிகளைச் செய்வதற்கான தேவை அதிகரிக்கும் என்பது முக்கியமான கேள்வி. தற்போதைய நிலையில்,  மெஷின் லேர்னிங் இன்ஜி னீயர், அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அனலிஸ்ட், டேட்டா சயன்டிஸ்ட், பேக்-என்ட் டெவலப்பர் போன்ற பணிகளைச் செய்வதற்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகளுக்கேற்ப தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வது ஐ.டி துறையில் பணியாற்ற விரும்புகிறவர் களுக்கான அடிப்படைத் தகுதியாகும். 

ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

இந்தத் துறையில் வேலை வாய்ப்பு எவ்வாறு உள்ளது, அதற்குத் தங்களை எப்படித் தகுதிப்படுத்திக்கொள்வது என மென்பொருள்துறை வல்லுநரான ஷான் கருப்பசாமியிடம் கேட்டோம்.

“ஆட்டோமேஷன் வளர்ச்சியடைந்தால் மற்ற வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை. இதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. ஆனால், பல புதிய வேலைகளையும் இதனால் உருவாக்கக் கூடும். இந்த ஆட்டோமேஷன் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப்பிறகு சுயதொழில் செய்வதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. நமக்கு ஏதேனும் ஒரு தொழில் தெரிந்திருந்து, கையில் மொபைலும் இருந்தால், நம்மைத் தேடி வேலை வரும். ஒருபக்கம் பல வேலைகள் முடிவுக்கு வந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாகப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஐ.டி துறை, தொண்ணூறுகளில் இருந்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. அந்தக் காலத்தில் இந்தத் துறையில் இருந்தவர்கள் இன்றுவரை தங்களை மாற்றிக்கொண்டு செயல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தற்போது ‘பிக் டேட்டா அனலிட்டிக்ஸ்’ என்ற பணி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களில் நாம் ஏற்றும் புகைப்படங்கள், தேடல்கள் அனைத்தையும் டேட்டாவாக மாற்றுகிறார்கள். இதன்மூலம் பல்வேறு புள்ளி விவரங்களை உருவாக்கு கிறார்கள். ஒரு குறிப்பிட்ட வயதில், குறிப் பிட்ட வருமான வரம்பில் இருக்கும் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள், எந்தமாதிரி யான கார்களை வாங்க விரும்புவார்கள் என்ற புள்ளி விவரம், கார் தயாரிப்பு நிறு வனங்களுக்குத் தேவையான ஒன்றாகும். அந்தப் புள்ளி விவரம் கிடைத் தால் தங்கள் தொழிலை மிகவும் லாபகர மானதாக நடத்துவது எளிது. ஆக இந்த மாதிரியான தகவல்களைத் திரட்டுவது தான் ‘பிக் டேட்டா’ எனப்படுகிறது.

அதேபோல, நம் வீட்டில் இருக்கும் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுப் பொருள்களை வைத்து நமது உணவுப் பழக்க வழக்கத்தைக் கணக்கிட இயலும். அதற்கேற்ப ரெஃப்ரிஜிரேட்டர்கள் பயன்பாட்டில் வந்துவிட்டன. இந்த பிக் டேட்டா அனாலிட்டிக்ஸினால் பலவிதமான வேலை வாய்ப்புகள் உருவாகும் சாத்தியம் உள்ளது.

ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

பிக் டேட்டாவின் வளர்ச்சி எந்த அளவிற்கு இருக்குமென்று பார்த்தால், ஒருவரின் 40 ஆண்டுக் கால மருத்துவக் குறிப்புகளைக் கொண்டு, அடுத்த பத்தாண்டுகள் கழித்து அவருக்கு என்ன மாதிரியான வியாதிகள் வரக்கூடும் என்று முன்கூட்டியே கணிக்க முடியும்.

அடுத்து, விர்ச்சுவல் ரியாலிட்டி என்கிற துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். நாம் ஓரிடத்திற்குச் செல்லாமலேயே நம்மை அழைத்துச் செல்வதுதான் இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி. இது கல்வித் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.

அடுத்ததாக, ‘3டி பிரின்டிங்.’ நாஸ்காம் குறிப்பிட்டுள்ள ஒன்பது வகையான வேலைவாய்ப்புகளில் 3டி பிரின்டிங்கும் உள்ளது. 3டி பிரின்டிங்கில் ஒரு பொருளைத் தயாரிக்கத் தொழிற்கூடமே தேவை யில்லை. அந்தப் பொருளின் மாடலும், டிசைனும் மட்டுமே போதுமானது. பல்வேறு உதிரிப் பாகங்களை இணைத்து ஒரு பொருளை உருவாக்குவதைவிட, ஒரு பொருளை அப்படியே உருவாக்குவது 3டி பிரின்டிங்கில் சாத்தியம்.  இதன்மூலம் கால் துண்டானவருக்கு  செயற்கைக்கால் உருவாக்கி, பொருத்தி நடக்கவைத்திருக் கிறார்கள். விண்வெளியிலுள்ள சோதனைக்கூடத்தில் இருப்பவர்கள், தங்களது தேவைக்காக இந்த 3டி பிரின்டர் மூலமாக ஒரு காபி மெஷினையே உருவாக்கினார்கள்.

இன்றைய சூழலில், ஐ.டி துறையின் பயன்பாடு பெரிய விருட்சம்போல, அனைத்துத் துறை களிலும் விரவியிருக்கிறது. எனவே, இந்தத் துறையைப் பொறுத்தவரை, ‘எத்தகைய வேலையாக இருந்தாலும்  அதனைப் புரிந்து கற்றுக்கொண்டு செய்துதர’  இன்றைய இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட திறன் வாய்ந்த பணி யாளர்களுக்குத்தான் தற்போது அதிக வேலைவாய்ப்பு இருக்கிறது.
இனியும் ஏதேனும் ஒரு மென் பொருளில் மட்டுமே எக்ஸ்பர்ட்டாக இருப்பதெல்லாம் சரிப்பட்டு வராது. படித்துமுடித்த கையோடு புதிதாக இந்தத் துறைக்குள் வருபவர்களிடம் குறைந்தபட்சம் கணினி குறித்த புரிதலும், இணையம், கம்ப்யூட்டர் கோடிங் குறித்த அடிப்படை அறிவும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு விஷயத்தைத் தந்தால், அதைப்பற்றி அலசி ஆராயத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் நமக்கு வேலை தருபவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் திறமையை வளர்த்துக்கொள்வது இன்றைய இளைஞர்களுக்கு முடியாத செயலல்ல. இன்றைக்கு உலக அளவில் கணினித் தொழில்நுட்பம் எப்படி இருக்கிறது, இதன் எதிர்காலப் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால், ஐ.டி துறை தொடர்பான வேலைகளில் என்றும் ஜொலிக்க முடியும்” என்று முடித்தார்.  ஐ.டி துறையில் வேலைவாய்ப்பு என்பது ஏதோ ஒரு  மென்பொருளை மட்டுமே தெரிந்துவைத்திருப்பது என்கிற  நிலையிலிருந்து மாறி, எந்த மென்பொருளில் வேலை என்றாலும் செய்யத் தெரிந்திருக்க வேண்டியுள்ளது என்கிற அளவுக்கு மாறியிருக்கிறது. இப்படிப்பட்ட செயல்திறனை வளர்த்துக்கொள்வதன்மூலமே இன்றைய இளைஞர்கள்  வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இன்றைய இளைஞர்களுக்கு முடியாது என்பது கிடையவே கிடையாதே!

- தெ.சு.கவுதமன்

படம்: ப.சரவணக்குமார்

அப்டேட் அவசியம்!

செந்தில்குமார், தமிழ்நாடு மண்டலத் தலைவர், நாஸ்காம்.

ஐ.டி துறையில் ஒரு லட்சம் பேருக்கு வேலை... நீங்கள் தயாரா?

‘‘டெக்னாலஜி வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே, நிறுவனங்களும், பணியாளர்களும் அதற்கேற்ப அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கவேண்டும். புதிதாகப் படித்துமுடித்து இந்தத் துறைக்கு வருபவர்களைப் பொறுத்தவரை, தற்போது எந்தெந்தப் புதிய பிரிவுகளில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டு, அதில் தங்களது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனுபவமிக்க பணியாளர்கள், புது டெக்னாலஜிகள் வரவர அவற்றிற்கேற்ப தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும். இவர்களின் தகுதித்திறனை மேம்படுத்த அந்தந்த நிறுவனங்களே பயிற்சி அளிக்கின்றன. நாஸ்காம் அமைப்பின் சார்பாக ஃபியூச்சர் ஆஃப் ஸ்கில்ஸ் என்கிற பயிற்சி வகுப்பின்மூலம், ஐ.டி துறையில் ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட ஒன்பது வகையான பிரிவுகளில் உலகளாவிய தேவை இருப்பது குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பணியைச் செய்து வருகிறோம்.’’