சரப்ஜித்சிங் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவு!


லாகூர்: சரப்ஜித்சிங் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் சிறையில் கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தாக கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரப்ஜித்சிங் இன்று காலை மரணம் அடைந்தார். இந்நிலையில், இதுகுறித்து நீதி விசாரணை நடத்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
##~~## |
தாக்கியவர்கள் மீது கொலை வழக்கு
இதனிடையே சரப்ஜித் சிங்கை தாக்கிய கைதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
கொலையாளிகள் தண்டிக்கப்படுவார்கள்
இதனிடையே சரப்ஜித் கொலைக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் தற்காலிக முதலமைச்சர் நஜம் சேதி, இந்திய தூதரக அதிகாரிகளிடம் உறுதி அளித்துள்ளார்.