Published:Updated:

பெனாசிர் பூட்டோ கொலைவழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் சுட்டுக் கொலை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோ கொலைவழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் இன்று சுட்டு கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த சவுத்ரி ஷூல்பிகர் அலி, முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ  கொலை  வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வந்தார். மேலும்,  2008 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கிலும் அரசு தரப்பில் ஆஜராகி வந்தார்.

##~~##
இந்நிலையில் இன்று காலை பெனாசிர் கொலை வழக்கில் ஆஜராக ராவல்பிண்டி நீதிமன்றத்திற்கு புறப்பட்டு சென்றார் அப்போது  மோட்டார்  சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் காரில் சென்ற அவர் மீது  துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார் உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு அவர் மரணமடைந்தார். 
பாகிஸ்தானில் அரசு வழக்கறிஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.