Published:Updated:

காயமடைந்த கைதியை பாகிஸ்தான் அனுப்ப கோரிக்கை

காயமடைந்த கைதியை பாகிஸ்தான் அனுப்ப கோரிக்கை
காயமடைந்த கைதியை பாகிஸ்தான் அனுப்ப கோரிக்கை
காயமடைந்த கைதியை பாகிஸ்தான் அனுப்ப கோரிக்கை

இஸ்லாமாபாத்: ஜம்மு சிறையில் காயமடைந்த பாகிஸ்தான் கைதியை மனிதாபிமான அடிப்படையில் தங்களது நாட்டிற்கு அனுப்புமாறு அந்நாட்டு அரசு இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் 600க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் சனாவுல்லா ஹக் என்ற பாகிஸ்தானியர் 15 ஆண்டுகளுக்கு மேலாக இச்சிறையில் உள்ளார். இந்நிலையில் இன்று காலை கோட் பல்வால் சிறைக் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் சனாவுல்லா ஹக், சக கைதிகளால் தாக்கப்பட்டார். இதனையடுத்து, அவரை சிறை அதிகாரிகள் ஜம்மு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முன்னாள் இந்திய ராணுவ வீரரால் தாக்கப்பட்ட சனாவுல்லாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் 'கோமா' நிலையில் உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

##~~##
இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சனாவுல்லா ஹக்கை பாகிஸ்தான் அனுப்புமாறு அந்நாட்டு அரசு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக இதேப்போன்று பாகிஸ்தான் சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட இந்தியரான சரப்ஜித் சிங்கை, சிகிச்சைக்காக இந்தியா அனுப்புமாறு விடுத்த வேண்டுகோளை பாகிஸ்தான் அரசு நிராகரித்துவிட்டதும், சரப்ஜித் சிங் மரணமடைந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.