Published:Updated:

ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் நிரபராதிகளாம்: இலங்கை அரசு சொல்கிறது

கொழும்பு: சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் நிரபராதிகள் என்று மன்னார் நீதிமன்றத்துக்கு இலங்கை அரசு கடிதம் எழுதியுள்ளதால் அவர்கள் விரைவில் விடுதலையாக வாய்ப்புள்ளது.

கடந்த மாதம் 6ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள்  30 பேரையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர்.

மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள் தற்போது அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் 30 பேரும் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, மீனவர்கள் 30 பேரின் காவலை வரும் 20ஆம் தேதி வரை நீடித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

##~~##
இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேரும் நிரபராதிகள் என்று மன்னார் நீதிமன்றத்துக்கு இலங்கை அரசு இன்று கடிதம் எழுதியுள்ளது.
இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க மீனவர்களை விடுவிக்க மன்னார் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இதனால் மீனவர்கள் விரைவில் விடுதலை ஆக உள்ளனர்.