முன்பெல்லாம் படிக்கும் மாணவர்கள், பெரிய நிறுவனத்தில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க

வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தனர். ஆனால், தற்போது இந்த நிலைமை மாறி இருக்கிறது. படித்து முடித்தவுடன் நிறுவனம் தொடங்குவது, அல்லது புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. இதற்கு சமீபத்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெற்றியே மாணவர் களின் சிந்தனை மாற்றத்துக்குக் காரணம்.

பொதுவாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படுவது அதிகரித்திருக்கிறது என்றாலும், இது குறித்த புள்ளிவிவரங்கள் முழுமையாக இல்லை. சமீபத்திய டை சென்னை நிகழ்ச்சியில் இதுவரை எவ்வளவு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப் பட்டிருக்கின்றன, எந்தெந்தப் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்த அறிக்கையை ஐ.ஐ.டி பேராசிரியர் எ.தில்லை ராஜன் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் அவர் சொல்லி யிருப்பதாவது...

‘‘கடந்த 2000-ம் ஆண்டு முதல் இதுவரையில் 12.60 லட்சம் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப் பட்டிருக்கின்றன. இவற்றில் முதலீட்டுக்கேற்ற வகையில் உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2.75 லட்சம் மட்டுமே. இவற்றில் வென்ச்சர் கேப்பிட்டல் நிதி கிடைத்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெறும் 6,214 மட்டுமே. இவற்றிலிருந்து வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் வெற்றிகர மாக வெளியேறியது, 1,624 ஸ்டார்ட்அப் நிறுவனங்களிலிருந்து மட்டுமே.

பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு அதாவது, 21.7 சதவிகித நிறுவனங்களுக்கு அதிக வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு கிடைத்திருக்கிறது. மாறாக, சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனங்களில், 1.2% நிறுவனங்களுக்கு மட்டுமே வென்ச்சர் கேப்பிட்டல் நிதி கிடைத்திருக்கிறது.

எந்தத் துறைக்கு முதலீடு?

சாஃப்ட்வேர், கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் மற்றும் ஃபைனான்ஷியல் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு முதலீடு கிடைத்தி ருக்கிறது. அதேபோல, நிறுவனம் தொடங்கிய வுடன் நிதி திரட்டுவதைவிட, ஒருசில ஆண்டுகளுக்குப்பிறகு நிதி திரட்டும்பட்சத்தில் கூடுதல் மதிப்புடன் (valuation) முதலீடு கிடைத்துள்ளது.

அதேசமயம், அடுத்தடுத்த கட்ட முதலீடுகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் துறையைப் பொறுத்தே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்ட முதலீடு இணையம் மற்றும் இ-காமர்ஸ் துறை நிறுவனங்களுக்கு அதிகம் கிடைக்கின்றன. மூன்றாம் கட்ட முதலீடு இந்த இரண்டு துறைகளைத் தவிர, கல்வி சார்ந்த டெக்னாலஜியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அதிகம் கிடைக்கின்றன.

முதலீட்டு நிறுவனங்களின் சராசரி முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளாக இருக்கிறது. இணையம், இ-காமர்ஸ், சாஃப்ட்வேர் சேவைகள், நுகர்பொருள் நிறுவனங்கள் ஆகிய பிரிவுகளில் முதலீட்டாளர்கள் வெற்றிகரமாக வெளியேறியிருக்்கிறார்கள். ஆனால், டெக்னாலஜி நிறுவனங்களில் முதலீட்டாளர் களுக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை.

எவ்வளவு சதவிகிதம்?

ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ததன்மூலம் முதலீட்டாளர்களுக்குச் சராசரியாக 13.25% வருமானம் கிடைத்தி ருக்கிறது. சராசரியைவிட சாஃப்ட்வேர் சேவைகள் மற்றும் கன்ஸ்யூமர் புராடக்ட் நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீட்டுக்கு அதிக வருமானம் கிடைத்திருக்கிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களினால் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி யிருப்பது போலத் தோன்றினாலும், அது உண்மை நிலை அல்ல.

உதாரணத்துக்கு, ரூ.100 கோடி சந்தை மதிப்புள்ள பெரிய நிறுவனங் கள் 35 வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என வைத்துக் கொண்டால், ரூ.100 கோடி சந்தை மதிப்பு உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனம் 0.04 வேலைவாய்ப்பினை மட்டுமே உருவாக்கியிருக்கிறது.

எண்ணிக்கை அடிப்படையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிக வேலை வாய்ப்பை வழங்குவதுபோல தோற்றம் தந்தாலும், அதில் உண்மையில்லை” என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தமது சந்தை மதிப்பை உயர்த்திக்கொள்வதில் தீவிரமாகக் கவனம் செலுத்துவதுபோல, புதிய வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்குவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.