Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

விஷ்வா விஸ்வநாத்
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பல்லா பதவி விலகினார் - செய்தி.

# பாகிஸ்தான் கரன்சியை டீமானிடைசேஷன் பண்ண முடியுமான்னு இவர் கிட்ட கேட்டிருப்பாங்க.

 நாச்சியாள் சுகந்தி
ஏ.டி.எம் வாசல்ல வரிசையில நின்னவன் எல்லாம், ஓட்டு    போடறதுக்கும் வரிசையில நின்னுருக்கான்!

ஆஹான்# ஐந்துமாநிலத்தேர்தல்முடிவு

அருள் எழிலன்
நல்ல நாள்லயே ஓடிவந்து ஓடிவந்து கட்டிப் புடிப்பார்  ராகுல். இப்ப வேற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குதே…

# மோடி கீ மைண்டி வாய்ஸ்கியா

 கல்லிடை வெங்கட்
“அரைப்பரீட்சையில அஞ்சு பாடத்திலேயும் பெயில் ஆயிட்டியேப்பா?”

“சார், எந்தப் பாடத்துல வீக்கா இருக்கேன்னு தெரிஞ்சுட்டு முழுப்பரீட்சையில சென்டம் வாங்கணும்னுதான், இப்படி மாஸ்டர் பிளான் பண்ணி பெயில் ஆனேன்.”

“அப்ப இதை நீ தோல்வியா நினைக்கலையா?”

“இல்ல சார், இது ஒரு வெற்றிகரமான தோல்வி.”

 Saraa Subramaniam
லவ்வபிள் பிரேக்கப் என்பதும் ஒரு வெற்றிகரமான தோல்விதான்.

 Senthil arumugam
ராமர் வனவாசம் சென்ற பாதையில் ‘ராமர் பாதை’ அமைப்போம். கோமியம், பசுவரட்டி தயாரிப்புத் தொழிலாக நடத்தப்படும். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் கோசாலைகள் அமைப்போம். பசுக்களுக்கு சாலையோரம் தற்காலிகத் தங்கும் கூடங்கள் அமைப்போம். சாலையில் அடிபடும் பசுக்களுக்கு மருத்துவம் பார்க்கப்படும். அடிபட்டு இறக்கும் பசுக்கள் நல்லடக்கம் செய்யப்படும். பசுக்கள் புல் மேய நிலம் ஒதுக்கப்படும். ஆன்மிகத்தை வளர்க்க ‘அத்யமிக் விபாக்’ திட்டம் செயல்படுத்தப்படும். சமஸ்கிருதத்தை வளர்க்கத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இது பி.ஜே.பி தேர்தல் அறிக்கை அல்ல, மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை. இந்துக்களின் ஓட்டைப் பறிக்க காங்கிரஸ் செல்லும் பாதை சரியா?

 Thullukutti
33 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. 1,324 பள்ளிகளில் தலா ஒன்பது மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.  - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

# ஆங்கில வழி கல்வி வழங்கும் தனியார் பள்ளிகளுக்கான அனுமதியை மறுபரிசீலனை செய்யுங்கள். காலிப் பணியிடங்களை உடனே நிரப்புங்கள். மாணவர்கள் மொழிப் பாடங்களில் எழுத்து, உச்சரிப்புத் திறனில் சிறந்து விளங்க கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்துவதைக் கட்டாயமாக்குங்கள்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை, பைகள், காலணிகளில் கமிஷன் பார்ப்பதைத் தவிர்த்து, அப்பொருள்கள் வெளிச்சந்தைகளில் கிடைக்கும் தரத்துடன் வழங்குங்கள். இதையெல்லாம் செய்யுங்கள், பள்ளிகளை மூட வேண்டிய அவசியம் ஏற்படாது.

 Sivakumar Sankarlingam
பிரதமரு என்ன படிச்சிருக்காருன்னே தெரியாத தேசத்தில், RBI Governor MA History வரை படிச்சிருகாருன்னு சந்தோஷ படுங்கப்பா..

 கருப்பு கருணா
ஸ்வச் பாரத் திட்டம் மூன்று மாநிலங்களில் நடைமுறைக்கு வந்தது!

ஆஹான்

 Ravi Kumar
இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்கள் நடப்பதைத் தடை செய்யுமா?

 Iyan Karthikeyan
அவரைத் தவிர எல்லாரும் ராஜினாமா பண்றாங்க ;)

அது சரி... அடுத்து டூரா, கல்யாண வீடா?

#rbi

ஆஹான்

HAJAMYDEENNKS
நிறையப் பேர் பி.ஜே.பி-யை எதிர்த்து ஓட்டு போட்டு  தோற்கடித்திருக்கிறார்கள். அப்படின்னா பிஜேபி-தான் பலசாலி - தோழர் ரஜினி!

#ElectionResults2018

 Mark2kali
இதுக்குத்தான் தமிழ்நாட்ல தேர்தலே வைக்கறதில்லை - எடப்பாடி பெருமிதம்

#Results2018

 Piramachari
நாங்க வேணா, ம.பி-ல ஆட்சி அமைக்க ஒரு 20 எம்.எல்.ஏ-வ இங்க இருந்து அனுப்பட்டா?!
- செல்லூர் ராஜு அறிவியல் மன்றம்

 RenugopalV
நீதிபதி கதறிட்டார்...

சி.பி.ஐ இயக்குநர் கதறிட்டார்...

ஆர்.பி.ஐ கவர்னரும் கதறிட்டார்...

சுயாட்சி அதிகாரம் இருக்க வேறு அமைப்பு ஏதும் இருக்கா என அன்போடு விசாரித்துச் சென்றார் ஏழை தாயின் மகன்

chandhira_twitz
எல்லா ஊரு பேரையும் மாத்தினாங்க!

எல்லாப் பழைய திட்டங்களுக்கும் பேரை மாத்தினாங்க!

இப்ப டிவிஸ்ட்டு என்னன்னா தோல்வியின் பெயரும் மாற்றப்பட்டதுதான்!

#வெற்றிகரமான தோல்வி

parveenyunus

திருமாவளவன் அரசியலில் நல்ல இடத்துக்கு வரவேண்டும் என நினைப்பவன் நான். - வைகோ

# விஜயகாந்த் வரணும்னு நெனச்சீங்களே... அது மாதிரியா?

BoopatyMurugesh

ரிசர்வ் பேங்க் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா.

சர்தார் படேல நிக்க வச்சுட்டு, உர்ஜித் படேல ஓட வெச்சுட்டிங்களே!