Published:Updated:

ராஜபக்சேவுக்கு பிரணாப் ஆலோசனை உதவி?

 ராஜபக்சேவுக்கு  பிரணாப் ஆலோசனை உதவி?
ராஜபக்சேவுக்கு பிரணாப் ஆலோசனை உதவி?
 ராஜபக்சேவுக்கு  பிரணாப் ஆலோசனை உதவி?

கொழும்பு: இலங்கைக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களில் இருந்து

 ராஜபக்சேவுக்கு  பிரணாப் ஆலோசனை உதவி?

விடுபடுவதற்கான ஆலோசனைகளை கூறி  அதிபர் ராஜபக்சேவுக்கு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உதவி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்த ஆண்டு இலங்கையில் நடத்தக் கூடாது என்ற உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அழுத்தம் அதிகரித்திருந்த போதும், இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படும் என்ற தீர்மானத்தில் மாற்றங்கள் இல்லை என்று காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இந்நிலையில் இதன் பின்னணியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இருப்பதாகவும், இதனை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகமே ஒப்புக் கொண்டிருப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கை குறித்த இந்தியாவின் பல்வேறு தீர்மானங்களின் பின்னணியிலும், ராஜபக்சேவை பாதுகாக்கும் தேவதையாக பிரணாப் செயற்பட்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

##~~##
மகிந்த ராஜபக்சேவுக்கும், பிரணாப் முகர்ஜிக்கும் இடையிலான உறவு கடந்த யுத்த காலத்தில் இருந்து ஆரம்பித்ததாகவும், கடைசிக்கட்ட போரின்போது இறுதி நாட்ளுக்கு முன்னதாக பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு, இரண்டு மணி நேரத்தில் இந்தியா திரும்பியதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.