Published:Updated:

`நிர்வாணத்துக்கு மதிப்பு இல்லை!''- பாரீசின் முதல் ஹோட்டல் மூடப்படுகிறது

`நிர்வாணத்துக்கு மதிப்பு இல்லை!''- பாரீசின் முதல் ஹோட்டல் மூடப்படுகிறது
`நிர்வாணத்துக்கு மதிப்பு இல்லை!''- பாரீசின் முதல் ஹோட்டல் மூடப்படுகிறது

ஃபேஷனுக்கு புகழ்பெற்ற பாரீஸ் நகரத்தில் செயல்பட்டு வந்த முதல் நிர்வாண ஹோட்டல் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இல்லாததால் மூடப்படுகிறது.  இந்த ஹோட்டல் தொடங்கப்பட்ட 15 மாதங்களில் இழுத்து மூட வேண்டிய நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. 

கடந்த 2017- ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் O'naturel என்ற பெயரில் இந்த நிர்வாண ஹோட்டல் திறக்கப்பட்டது. நிர்வாணமாக மக்கள் உலவும் கடற்கரைகளை முன்மாதியாக கொண்டு இரட்டைச் சகோதரர்களான மைக் மற்றும் ஸ்டீஃபானே சடா  இதைத் தொடங்கினார்கள். ஹோட்டலுக்கு வருபவர்கள் தனியறைக்குள் சென்று ஆடைகளைக் களைந்துவிட வேண்டும். கைப்பேசியையும் ஹோட்டல் நிர்வாகத்திடம் வழங்கிவிட வேண்டும். ஹோட்டல் நிர்வாகம் தரும் சாதாரண காலணியை அணிந்து கொண்டே உள்ளே செல்ல வேண்டும். வெள்ளைத் துண்டுகளைக் கொண்டு உடலின் முக்கிய அங்கங்களை மூடிக் கொள்ளலாம்.

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்தின்படி சட்டத்துக்குட்பட்டு நடக்கலாம். ஆனால், வாடிக்கையாளர்களுக்குச் சேவை புரிபவர்கள் முறையான ஆடை அணிந்திருக்க வேண்டும். அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்பவர்கள் சீருடை அணிந்தே உணவு பரிமாற முடியும். ஹோட்டலின் ஜன்னல்கள் கறுப்புத் திரையால் மூடப்பட்டிருக்கும். இதனால் வெளியிலிருந்து யாரும் உள்ளே எட்டிப் பார்க்க வாய்ப்பு இல்லை. பிரெஞ்சு வகை உணவுகள் உள்ளிட்ட மூன்று  ரக உணவுகள் இங்கு 57 யு.எஸ். டாலர்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்களிடமிருந்து சரியான வரவேற்பு இல்லாததால் ஹோட்டலை பிப்ரவரி 15-ம் தேதி மூடுவதாகச் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். 

``இந்த ஹோட்டலுக்கு சில அற்புதமான வாடிக்கையாளர்கள் வந்திருக்கின்றனர். அத்தகைய நல்ல நினைவுகளை மட்டுமே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறோம்''  என்கின்றனர் ஹோட்டலை தொடங்கியவர்கள்.