Published:Updated:

சீனா வந்திறங்கினார் சல்மான் குர்ஷித்!

சீனா வந்திறங்கினார் சல்மான் குர்ஷித்!
சீனா வந்திறங்கினார் சல்மான் குர்ஷித்!
சீனா வந்திறங்கினார் சல்மான் குர்ஷித்!

பீஜிங்: 2 நாள் அரசு முறைப் பயணமாக புறப்பட்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இன்று சீனா வந்திறங்கினார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு சீனா விடுத்த அழைப்பை ஏற்று, சல்மான் குர்ஷித் இன்று டெல்லியில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சீன தலைநகர் பீஜிங் சென்றடைந்த அவரை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருக்கும் சல்மான் குர்ஷித், சீனாவின் புதிய பிரதமர் லீ கெகியாங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களுடன் இரு நாட்டு நல்லுறவு, மத அடிப்படையிலான விஷயங்கள், சர்வதேச விவகாரங்கள் போன்றவற்றை கலந்தாலோசிக்க உள்ளார்.

##~~##
அண்மையில் லடாக் பகுதில் சீன படையினர் ஊடுருவிய விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இரு நாடு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஊடுருவல் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.