Published:Updated:

தேர்தல் பிரச்சார கூட்டத்திலிருந்து பாக். முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் கடத்தல்

இஸ்லாமாபாத்: தேர்தல் பிரச்சார கூட்டத்திலிருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 11 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில், முல்டான் என்ற இடத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் கிலானியின் மகன் அலி ஹைதர் கலந்துகொண்டார்.

அப்போது அங்கு கைகளில் ஆயுதங்களுடன்  திடீரென 2 கார்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அலி ஹைதரின் செயலர் குண்டுபாய்ந்து உயிரிழந்தார். மேலும் அக்கும்பல் சுட்டதில் ஹைதருக்கும் காயமேற்பட்டது.

அந்த காயத்துடன் அவரை துப்பாக்கி முனையில் அக்கும்பல் கடத்திச் சென்றதாகவும், போகும்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டதாகவும் நேரில்

##~~##
பார்த்தவர்கள் கூறியதாக பாகிஸ்தானின் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.