Published:Updated:

சீனாவுக்கு சென்றும் ஊடுருவல் குறித்து கேள்வி கேட்காத சல்மான் குர்ஷித்!

பீஜிங்: சீனா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் , அந்நாட்டுடன் சமீபத்திய லடாக் ஊடுருவல் குறித்து கேள்வி எதுவும் கேட்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2 நாள் பயணமாக சல்மான் குர்ஷித் நேற்று சீனா சென்றார். தலைநகர் பீஜிங்கில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி மற்றும் பிற தலைவர்களை சந்தித்துப் பேசினார் குர்ஷித். அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியில் அண்மையில் சீன படையினர் ஊடுருவியது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் குர்ஷித் எதுவும் கேட்கவில்லை.

##~~##
இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குர்ஷித், "இந்திய எல்லைப் பகுதியான லடாக்கிற்குள் சீன வீரர்கள் ஊடுருவியதற்கான காரணம் தெரியவில்லை என்றும்,
சீன ஊடுருவல் குறித்து தான் கேட்கவில்லை என்றும், அதுவும் அதுபற்றி எதையும் விளக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் இது வரை நடந்த விஷயங்களைப் பற்றி பேசாமல், இனி மேல் நடக்கும் சுமூகமான விஷயங்களைப் பற்றியே தலைவர்களுடன் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

இதனிடையே ஊடுருவல் குறித்து சீனாவிடம் சல்மான் குர்ஷித் விளக்கம் கோராததற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.