Published:Updated:

பாக். நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புக்கிடையே வாக்குப்பதிவு

பாக். நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புக்கிடையே வாக்குப்பதிவு
பாக். நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புக்கிடையே வாக்குப்பதிவு
பாக். நாடாளுமன்ற தேர்தல்: பலத்த பாதுகாப்புக்கிடையே வாக்குப்பதிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மொத்தம் உள்ள 342 இடங்களுக்கு இன்று காலை வாக்குப் பதிவு துவங்கியது. பல்வேறு இடங்களில் தாலிபான் ஆதரவு இயக்கத்தினர் எச்சரிக்கை மிரட்டல் விடுத்திருந்த நிலையில், கடும் பாதுகாப்புகளுக்கு இடையே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

பாகிஸ்தானில் மறைந்த பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்து தனது பதவி காலத்தை பூர்த்தி செய்துள்ளது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 65 ஆண்டு காலத்தில் ஒரு கட்சி பதவி காலத்தை முழுமையாக முடித்ததை வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

இத்தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரிக்-இ- இன்சாப் ஆகிய 3 கட்சி கூட்டணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் 4670 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அது தவிர புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வகை செய்யும் 4 மாகாண சட்டசபை தேர்தலும் நடக்கிறது. இதில் 11 ஆயிரம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் 8 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
 

<

##~~##

p>தாலிபான்களின் மிரட்டல் காரணமாக இன்று நடைபெறும் வாக்குப் பதிவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு பணியில் 6 லட்சம் ராணுவ வீரர்களும், போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தும் பொது மக்கள் நீண்ட  வரிசையில் நின்று வாக்கு சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். 

அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசாரும், ராணுவமும் பாதுகாப்பாக நிற்கின்றனர். கடுமையான சோதனைக்கு பிறகே வாக்குச் சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.