கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி நகரில் அடுத்தடுத்து நடந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களில் 15 பேர் பலியாயினர். 40 பேர் காயமடைந்தனர்.
அவாமி தேசிய கட்சியின் வேட்பாளர் அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் அக்கட்சியின் தொண்டர்கள் பலர் உயிரிழந்தனர்.
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்கும் முன்னரே அடுத்த குண்டு வெடிப்பு அங்குள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு அருகே நடந்தது. கராச்சியின் கஸ்பா காலனியில் பேருந்து ஒன்றில் அடுத்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
##~~## |
பெஷாவரில் பெண்கள் வாக்குப்பதிவு மையத்தின் அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இரு காவலர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குவெட்டா நகரில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்தனர். தெஹரிக் இ தலிபன் என்ற தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
அந்த அமைப்பு பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதில் பெரும்பாலும் அவாமி தேசிய லீக் கட்சியனரின் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism