Published:Updated:

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மன்மோகன் சிங்கிற்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மன்மோகன் சிங்கிற்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மன்மோகன் சிங்கிற்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு
பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மன்மோகன் சிங்கிற்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு

இஸ்லாமாபாத்/புதுடெல்லி: தமது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நவாஸ் ஷெரிப் அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரின் நவாஷ் ஷெரிப்பின் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்று 3 முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நவாஷ் ஷெரிப் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற ஷெரிப்புக்கு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, இந்தியாவிற்கு வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக கூறியுள்ள நவாஸ் ஷெரிப், பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு  அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரிப்,"நாங்கள் எங்களது பயணத்தை தொடர உள்ளோம்(1999ம் ஆண்டில் இருந்து). எனவே இந்தியா என்னை அழைக்கிறதோ அல்லது இல்லையோ. நான் இந்தியாவிற்கு செல்வேன் என்று கூறியிருந்தார்.

அவசரம் வேண்டாம்: பா.ஜ. எச்சரிக்கை


##~~##
இதனிடையே நவாஸ் ஷெரிப்புக்கு இந்தியா வருமாறு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, "ஷெரிப்புக்கு இவ்வளவு அவசரமாக அழைப்பு விடுக்க தேவையில்லை. ஷெரிப் பிரதமராக பதவியேற்று, இந்திய - பாகிஸ்தான் உறவில் எவ்வாறு மாற்றம் கொண்டு வரப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு அழைத்திருக்கலாம்" என்று கூறியுள்ளது.