Published:Updated:

இந்தியாவுக்குள் இனி பாக். தீவிரவாதிகள் ஊடுருவ மாட்டார்கள்: நவாஸ் செரீப் உறுதி

இந்தியாவுக்குள் இனி பாக். தீவிரவாதிகள் ஊடுருவ மாட்டார்கள்: நவாஸ் செரீப் உறுதி
இந்தியாவுக்குள் இனி பாக். தீவிரவாதிகள் ஊடுருவ மாட்டார்கள்: நவாஸ் செரீப் உறுதி
இந்தியாவுக்குள் இனி பாக். தீவிரவாதிகள் ஊடுருவ மாட்டார்கள்: நவாஸ் செரீப் உறுதி

லாகூர்: இந்தியாவுக்குள் இனி பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருக்காது என புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீ உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தான் தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, நவாஸ் செரீப்  3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தற்போது பாகிஸ்தானில் பல பிரச்னைகள் மற்றும் சவால்கள் உள்ளன. அதில் பொருளாதாரம் தான் மிக மோசமான சவாலாக உள்ளது. எனவே, நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு வருவதற்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன்.

பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும். நான் ஏற்கனவே 2 தடவை பிரதமராக பதவி வகித்து இருக்கிறேன். ஆனால், எனது ஆட்சிக்காலம் முழுவதையும் நிறைவேற்ற அனுமதிக்கவில்லை தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். ஏனெனில் இந்த தடவை ஆட்சி காலம் முழுவதையும் முடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

##~~##
தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி தவிக்கிறது. தீவிரவாதம் பர்வேஸ் முஷாரப் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்டது. முஷாரப்பின் அரசியல் கொள்கைகளால் தான் தீவிரவாதம் வெளிப்பட்டது. சர்வாதிகாரியான அவர்தான் பாகிஸ்தானில் மதவாதத்தையும், தீவிரவாதத்தையும் தோற்றுவித்தார்.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து இனி இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ அனுமதிக்க மாட்டோம் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன் என்று முஷரப் உறுதி அளித்து இருந்தார். ஆனால் அவை அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள் ஆகின.
தற்போது இந்தியர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே நாங்கள் (பாகிஸ்தானியர்கள்) விரும்புகிறோம். இனியும் ஒரு கார்கில் போர் நடைபெற அனுமதிக்க மாட்டோம்.
பாகிஸ்தான் மண்ணில் இருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவுவதை அனுமதிக்க மாட்டோம். மும்பையில் நடந்தது போன்று தீவிரவாத தாக்குதல்கள் இனி நடைபெறாது. ஏனெனில், தீவிரவாதத்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
ராணுவம் என்பது தொழில் ரிதியான அமைப்புதான். இந்தியாவுடனான நல்லுறவுக்கு ராணுவம் தடையாக இருக்காது என நினைக்கிறேன். முஷாரப் ராணுவ தளபதி ஆக இருந்த போது அவரே தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்தார். இதனால் பல பிரச்னைகள் உருவானது.
காஷ்மீர் பிரச்னை, 1999-ம் ஆண்டில் நடந்த லாகூர் பிரகடனம் போன்ற முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் உறுதியுடன் இருக்கிறேன். பிரதமர் அலுவலகம்தான் அதிகார மையம், ராணுவம்தான் பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவர்களில் யார் பெரியவர் (தலைவர்) என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். மேலும் மிகவும் அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு தருவேன். அதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் வியாபாரம் ஒப்பந்தம் ஏற்படும்.
பொருளாதாரமும், வர்த்தகமும் எனக்கு பிடித்த துறைகள். எனவே, பலமான பொருளாதார கொள்கைகளை கொண்டு வருவோம். அதை காத்திருந்து கவனியுங்கள். இந்தியாவுக்கு வருகை தருவதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் மன்மோகன் சிங்கும் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.
வாழ்த்து தெரிவித்த அவர் இந்தியா வருகை தரும்படி அழைப்பு விடுத்தார். அவரை சந்திக்க ஆவலமாக இருக்கிறேன். இருவரும் சந்தித்து, தெற்கு ஆசியாவில் அமைதியும், வளமும் ஏற்படபாடுபடுவோம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.