Published:Updated:

கோக்க கோலாவின் ஃபார்முலாவுக்கு ஆபத்து?

கோக்க கோலாவின் ஃபார்முலாவுக்கு ஆபத்து?
கோக்க கோலாவின் ஃபார்முலாவுக்கு ஆபத்து?
கோக்க கோலாவின் ஃபார்முலாவுக்கு ஆபத்து?

புகழ்பெற்ற குளிர்பானமான கொக்க கோலா உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. கொக்க கோலாவின் தயாரிப்பு ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த ரகசியத்துக்கே ஆபத்து வந்திருக்கிறது.

1943ஆம் ஆண்டிலிருந்து ஒரே மாதிரி சுவையுடன்  கொக்க கோலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தயாரிப்புக்கான ரகசிய குறிப்புகள் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் உள்ள டவுன்ட்டவுன் நகரில் உள்ள பழங்கால பேழை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

தற்போது அமெரிக்காவில் பழங்கால பொருட்களை விலைக்கு வாங்கி விற்கும் கிளிஃப் க்ளூக் என்பவர் 'தற்போது கொக்க கோலாவின் தயாரிப்பு ரகசியம் என்னிடம் உள்ளது' என்று பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் கூறியதாவது, ''சமீபத்தில் ஒரு எஸ்டேட்டில் உள்ள பழங்கால பொருட்களை நானும் என் மனைவி அர்லேனும் ஏலத்தில் எடுத்தோம். அந்த பொருட்களில் ஒரு மரப்பெட்டியும் இருந்தது.பெட்டிக்குள் இருந்த கடிதங்களில் கொக்க கோலா தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருட்கள், தயாரிக்கும் முறை தொடர்பான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.

இந்த குறிப்பு எனக்கு கிடைத்துள்ளது என கொக்க கோலா நிறுவனத்திடம் நான் தெரிவித்தேன். 10 நாட்களுக்குள் என்னை தொடர்பு கொள்வதாக அவர்கள் கூறினர். ஆனால், சொன்ன வார்த்தையை அவர்கள் காப்பாற்றவில்லை.

##~~##
எனவே, அந்த தயாரிப்பு ரகசியத்தை இணையதளம் மூலம் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளேன். ஆரம்ப விலையாக 50 லட்சம் அமெரிக்க டாலர்களை முன்னர் அறிவித்தேன். இப்போது ஒன்றரை கோடி டாலர்களாக உயர்த்தி விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் மேற்கொண்டு கேட்டு ஏலம் எடுத்துக் கொள்ளலாம்" என கிளிஃப் க்ளூக் கூறியுள்ளார்.